Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் ஆறுமாத குழந்தைக்கு பழச்சாறு வகைகள் செய்வது எப்படி| How to prepare fruit juices for baby

Vaishnavi Subramani Updated:
வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image.

பிறந்த குழந்தைக்கு  முதலில் தாய்ப்பால் கொடுப்பது என்பது   வழக்கம். ஆறுமாதம் ஆனால் திட மற்றும் திரவ உணவுகள் கொடுப்பது பழக்க வேண்டும்.கடைகளில் விற்கப்படும் உணவுகள் கொடுப்பதால் சத்து இருப்பதாகக் கூறினால் கூட, வீட்டில் செய்யும் உணவு போல் எந்த உணவுகளாலும்  சத்துதர இயலாது.  பழமையான காலங்களில் நாம்  முன்னோர்கள் குழந்தைகளுக்கு  வீட்டிலேயே தயாரிக்கும் உணவான தானிய வகைகள் பயன்படுத்தித் தயாரிக்கும் திரவ உணவுகளான கஞ்சி, அரிசிக் கஞ்சி ,பழச்சாறு போன்ற உணவுகள் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தனர். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அதிக ஊட்டச்சத்து உடையவர்களாகவும் இருந்தனர். இதனால்  நாம் குழந்தைக்கு ஆறுமாதம் ஆனால் பழச்சாறு தயார்செய்து கொடுக்கலாம். இந்த பழச்சாறு தயாரிப்பு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image

ஆப்பிள்

 ஆப்பிள் குழந்தைக்கான ஊட்டச்சத்து அதிகமான ஒரு பழம். இதனை உண்பதால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமானதாகவும்  இருக்கும்.  ஆப்பிளை முதலில் இட்லி பாத்திரத்தில் நன்றாக ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதிலிருந்து தோல் எளிதில் நீக்கி, அதனை மிக்ஸியில் போட்டு  நன்றாக மசித்து அதன் பின் சிறிதளவு வெந்நீர் அல்லது பால்  (தாய்ப்பால் அல்லது பசும்பால் கொடுப்பதாகயிருந்தால்) சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கலாம்.இதனால் குழந்தைகளுக்குச் செரிமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தடுக்க முடியும். பலரும் ஆப்பிளைத் தோல் சீவி   மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அதனைத் தவிர்த்து மேலே கூறியது போல் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பதால் செரிமான பிரச்சனை ஏதுவும் வராது.

 

குழந்தைகளுக்குப் பழச்சாறு கொடுக்கும் அளவு

துடக்கத்தில் பத்து டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்கலாம்.காலை பத்து மணிக்கு மேல் மதியம்  இரண்டு மணிக்குள் கொடுத்து விடவும். ஆப்பிள் இனிப்பு நிறைந்த பழம் என்பதால் சர்க்கரை சேர்க்காமல் குழந்தைக்குக் கொடுக்கவும். குழந்தைக்கு ஏற்றுக்கொள்கிறதா எனக் கவனிக்கவும். 

வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image

ஆரஞ்சு பழம்

 புளிப்பில்லாத ஒரு ஆரஞ்சு சுளை ஒன்று மற்றும் வெதுவெதுப்பான நீர் தேவைக்கேற்ப  எடுத்துகொள்ளவும். ஆரஞ்சு பழம் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ள ஒரு பழவகை என்பதால் இதனைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் எதிர்ப்பு சத்து அதிகரிக்கும் மற்றும் சாத்துக்குடி பழச்சாறும் தரலாம். ஆரஞ்சு பழம் கொட்டை  நீக்கி சாறு பிழிந்து அதை வடிகட்டிக் கொண்டு அதனுடன் சம அளவு நீர் சேர்த்து நன்றாகக் கலக்கிய பின் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

 

குழந்தைகளுக்குப் பழச்சாறு கொடுக்கும் அளவு:

துடக்கத்தில் பத்து டீஸ்பூன் அளவு கொடுக்கலாம்.தினமும் காலை பத்து மணிக்கு மேல் மற்றும் முன்று மணிக்குள் கொடுத்து விட வேண்டும்.ஆரம்பத்தில் ஒரு வேளை கொடுத்து வரவும்.வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்கவும்.அதன் பின் மூன்று முறையும் கொடுக்கலாம்.சளியிருந்தால் தவிர்ப்பது நல்லது.இதனால் செரிமான பிரச்சனைகள் எதுவும் வராது.

வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image

பப்பாளி

நாட்டுப் பப்பாளிப் பழங்களில் சத்துகள் அதிகம்.ஆனால்  ஹைபிரிட் (Hybrid) பழங்களில் சத்துகள்  இல்லை என்பதால் நாட்டுப் பழங்களை எடுத்து விதைகள் மற்றும் தோல்  நீக்கி எடுத்துக் கொண்டு நன்றாகக் கூழ் போன்று மசித்துக் கொண்டு அதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குப் பழச்சாறு கொடுக்கும் அளவு:

ஆரம்பத்தில் 3 டீஸ்பூன் கொடுக்கலாம்.வாரத்திற்கு ஒரு முறை மட்டும் கொடுக்கலாம்.இந்த பழம் அதிகமாகக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து   அதிகளவில் உள்ளதால் இதை குழந்தைகளுக்குக் கொடுப்பதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும் மற்றும்  மாலை வேளைகளில் கொடுத்தால் செரிமான நன்றாக ஆகும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கும்.

 

குழந்தைகளுக்குப் பழச்சாறு கொடுக்கும் அளவு:

துடக்கத்தில் சிறு  துண்டு அளவு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.பின் சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.இதனைக் கொடுக்கும் போது மற்ற பழக்கூழ் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் ஆறுமாத  குழந்தைக்கு பழச்சாறு வகைகள்  செய்வது எப்படி| How to prepare fruit juices for babyRepresentative Image

சப்போட்டா

 சப்போட்டா சத்து நிறைந்த பழவகைகள் அதில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது.இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் உடலில் சத்துகளில் அதிகரிக்கும். இதனைக் குழந்தைகள் சாப்பிடும் போது  வயிற்றில் சிறிது பிசுபிசுப்பான தன்மையை உணரும்.இதனால் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.பழத்தின் தோல் மற்றும் விதைகள் நீக்கி, அதனை நன்றாக மசித்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குப் பழச்சாறு கொடுக்கும் அளவு:

 ஆரம்பத்தில் குறைந்தளவு கொடுக்கவும். பிறகு சிறிது சிறிதாக அதிகரிக்கவும்.

குறிப்பு:

பழச்சாறு கொடுப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. ஆறுமாத்தில் குழந்தைகளுக்குப் பழச்சாறு தருவது நல்லது.பழச்சாறு தரும்போது அதனுடன் தேன் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.சில பழச்சாறு வகைகள் ஒரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.அந்த பழவகைகள் சிறு காலம் தவிர்ப்பது நல்லது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்