Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image.

வாரத்தில் கடைசி நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டிப்பாக ஒரு அசைவ உணவு செய்து சாப்பிட வேண்டும் எனப் பலரும் ஆசைப்படுவார்கள். அதில் எப்பொழுது சிக்கன் மற்றும் மட்டன் அல்லது மீன் என இது மூன்றை மட்டும் மாற்றி மாற்றி சமைத்தால் குழந்தைகளுக்கு வெறுத்துப்போகும்.

அதனால் அதற்கு மாற்றாக வேறு ஏதாவது சமைக்கலாம் என யோசிக்கிறீர்களா இந்த பதிவு உங்களுக்கு உதவும். இறால் சாப்பிடுவதால் உடலுக்குப் பலவகையான நன்மைகள் உள்ளது. எலும்புக்கு ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைப்பு எனப் பல நன்மைகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் எளிமையாக இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ இறால் – 500 கிராம்

✤ கல் உப்பு – சிறிதளவு

✤ மஞ்சள் தூள் – சிறிதளவு

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

இறால் பொரிக்கத் தேவையான பொருள்கள்

✤ உப்பு - தேவையான அளவு

✤ மிளகாய்த் தூள்- 2ஸ்பூன்

✤ மஞ்சள் தூள்- சிறிதளவு

✤ இஞ்சி- 1

✤ பூண்டு – 10

✤ எண்ணெய்- 6 டிஸ்பூன்

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

இறால் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்

✤ எண்ணெய் - 2 டிஸ்பூன்

✤ வெங்காயம் - 2

✤ பச்சை மிளகாய் - 3

✤ மிளகாய்த் தூள்- 3 டிஸ்பூன்

✤ கரம் மசாலா – 3 டிஸ்பூன்

✤ கருவேப்பிலை – சிறிதளவு

✤ மிளகு தூள் - 3டிஸ்பூன்

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் இரண்டு வெங்காயம் எடுத்துத் தோல் உறித்து கழுவி நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  மூன்று பச்சை மிளகாய் எடுத்துக் கழுவி நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

✤ இறாலை எடுத்து தண்ணீரில் சேர்த்து அத்துடன் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவிட வேண்டும். அதற்குப் பின்,எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும்.

✤ அதைத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். இஞ்சி தோல் உரித்து நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பத்து பூண்டு எடுத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். பூண்டு மற்றும் இஞ்சி மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

✤ அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்டில் ஒரு ஸ்பூன் எடுத்து  கழுவியை இறாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

✤ அத்துடன் காரத்திற்கு மிளகாய்த் தூள் இரண்டு டிஸ்பூன் அளவிற்குச் சேர்க்க வேண்டும். அதில் ஒரு டிஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

✤ அதை அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவேண்டும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து இறால் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது சூடான பின், கலக்கி வைத்த இறாலை எடுத்து அதில் சேர்த்துப் பொரிக்க வேண்டும். பாதி வெந்த உடன் எடுக்க வேண்டும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அது சூடான பின், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வார ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி ?Representative Image

✤ வெங்காயம் நன்றாக வதக்கிய பின், அதில் அரைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு டிஸ்பூன் அளவிற்கு  சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் மூன்று டிஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

✤ மசாலாவில் உள்ள பச்சை வாசம் மாறிய உடன் மூன்று டிஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

✤ அதில் பொரித்த இறாலைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக வெந்த உடன் எடுத்தால் சூடான மற்றும் சுவையான இறால் பெப்பர் வறுவல் தயார்.

✤ இதை வாரம் அல்லது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய ஒரு உணவு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்