Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at Home

Gowthami Subramani Updated:
வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at HomeRepresentative Image.

காதலர் வாரத்தில் இடம் பெற்றிருக்கும் டெடி டே தினத்தில் டெடி வாங்கி காதலர்களுக்கு பரிசளிப்பர். கடையில் வாங்கி டெடியைப் பரிசளிப்பது காட்டிலும், வீட்டிலேயே நாம் டெடியை செய்து வழங்குவதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த பாரம்பரிய டெடி பொம்மையை ஒரு தனிப்பட்ட நபருக்கு அன்புடன் வழங்குவதன் மூலம், அவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு தெரியும். இதில், எளிதாக வீட்டிலேயே டெடி பியர் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
 

வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at HomeRepresentative Image

டெடி பியர் செய்வது எப்படி?

வீட்டில் உள்ள சாதாரண துணியை வைத்தே டெடி பியரைச் செய்யலாம்.

✤ முதலில், நீங்கள் டெடி பியருக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவது ஒரு துணியை எடுத்துக் கொள்ளலாம்.

✤ பிறகு, டெடி பேட்டர்ன் ஒன்றை வரைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது டெடி பியரின் வடிவத்தை வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ இந்த டெடி பியர் பேட்டர்னை எடுத்து வைத்துக் கொள்வதன் மூலம், ஒரிஜினலாக இருக்கக் கூடிய டெடி பியரின் வடிவிலேயே பெற முடியும்.

✤ டெடி பியர் பேட்டர்னை துணியின் மேல் வைத்து, அதன் வடிவத்தைப் போல, துணியைக் கட் செய்து கொள்ள வேண்டும். டெடிபியர் வடிவத்தில் துணி யை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at HomeRepresentative Image

✤ பிறகு, அந்த துணியின் ஓரத்தில் மீண்டும் டெடிபியர் வடிவத்திற்கு ஏற்றவாறு குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறித்துக் கொண்டதில் ஊசியால் ஸ்டிட்ச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கையிலேயே செய்யலாம்.

✤ இவற்றின் தலைப்பகுதியில் ஸ்டிட்ச் செய்யாமல், மற்ற பகுதிகள் அனைத்திலும் ஸ்டிட்ச் செய்யலாம்.

✤ அதன் பின், அந்தத் துணியின் உள்பக்கம் வெளியில் தெரிகின்றவாறும், வெளிப்பக்கம் உள்ளே தெரிகின்றவாறும் மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது துணியின் அனைத்து ஓரங்களையும் திருப்பி சரியாக எடுத்துக் கொள்ளலாம்.

✤ இதன் உள்ளே, சில பஞ்சுகளை வைத்து உள்ளே நுழைத்துக் கொள்ளலாம். நன்றாக ஸ்கேல் வைத்து பஞ்சை உள்ளே நுழைத்து டெடியை உருவாக்கலாம்.

வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at HomeRepresentative Image

✤ பின், தலைப் பகுதியையும் ஸ்டிட்ச் செய்து கொள்ளலாம்.

✤ தனியாக வெள்ளைத் துணியை எடுத்து, அதனை முக்கோணமாக மடித்து அதன் உள்ளே பஞ்சை வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ ரிப்பன் ஒன்றை எடுத்து டெடியின் கழுத்துப் பகுதியில் கட்டி விடலாம்.

✤ பின், கண் பகுதிக்கு இரண்டு கருப்பு குண்டு எடுத்து வைக்கலாம்.

இது போல, டெடி செய்து உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்