Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn Marks

Gowthami Subramani Updated:
தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image.

நாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது எதாவதொரு சூழ்நிலையினாலோ ஒரு சில நேரங்களில் நம் உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த சூழ்நிலையில், தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் காயங்கள் மறைந்தாலும், அதில் தழும்புகள் ஏற்படும். இது ஒரு சில சமயம் விரைவாக மறைந்து விடும். இன்னும் ஒரு சில பேருக்கு, இதனை சரி செய்ய சிகிச்சைகள், கிரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனை வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே எளிமையாக தீக்காய தழும்புகளை சரி செய்யலாம். இதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image

பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு

இயற்கையாகவே, பாதாம் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதனால், இது இயல்பாகவே உடலில் உள்ள தழும்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாறானது ப்ளீச்சிங் செய்ய உதவுகிறது.

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் மூன்று முதல் நான்கு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இரண்டு, மூன்று துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். அந்தக் கலவையை, தழும்புகளின் மேல் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை இதே போன்று செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் குறையும்.

குறிப்பு: முழுமையாகத் தீக்காயங்கள் குணமடைந்த பின்னரே, இந்த முறையைப் பின்பற்றுவது அவசியம்.

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image

தேனைப் பயன்படுத்தி தழும்பை நீக்குதல்

தேனில் உள்ள சத்துக்கள், பொதுவான சருமப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இதில் உள்ள ஈரப்பதம், தழும்புகளை நீக்குவதற்கு மிக உதவியாக இருக்கும். இந்த தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பின் மேல் தினமும் தேனை தடவி வர விரைவாக மறைந்து விடும்.

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை

கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாகும். உடல்நலத்திற்கும், அழகுக்கும் பெரும்பாலும் உதவுகிறது. கற்றாழையின் ஜெல்களை எடுத்து, தழும்பு உள்ள இடத்தில் 20-30 நிமிடங்கள் மசாஜ் செய்து அதனை அப்படியே வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரில் கழுவ வேண்டும். இதனுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தழும்புகள் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கானது இயற்கையாகவே, பிளீச் பண்பைக் கொண்டுள்ளது. இதனால், இதனைப் பயன்படுத்தி எளிதாக தீக்காயத் தழும்பை சரி செய்ய முடியும். இதற்கு தினந்தோறும் உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து, அதனை மெலிதாக வெட்டி தீக்காயத் தழும்பு மீது மெதுவாகத் தேய்ய வேண்டும்.

இதிலிருந்து வரும் சாறு, தீக்காயத் தழும்பை சிறிது சிறிதாக நீக்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு தினமும் 3 முறை செய்யும் போது தழும்பு இருந்த இடம் இல்லாமல் போகும்.

தீக்காய தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to Remove Burn MarksRepresentative Image

வெந்தயம்

குளிர்ச்சி சக்தி மிகுந்த வெந்தயம் ஆனது, உடலில் தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற தழும்புகளில் இருந்தும் விடுபட உதவுகிறது. இதற்கு வெந்தயத்தை அரை கப் அளவு எடுத்துக் கொண்டு அதனை முந்தைய நாள் இரவிலேயே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், காலையில் அதனை ஒரு மிருதுவான பேஸ்டாக அரைக்க வேண்டும். இதனை தழும்பில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின்னர், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினந்தோறும் இரு முறை செய்வதன் மூலம் தழும்புகள் மறைந்து விடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்