Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?Representative Image.

கொழுக்கட்டை என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு மற்றும் கடவுளுக்குப் படைக்கும் உணவு. வீட்டில் விழாக்கள் மற்றும் பூஜை என்றால் முதலில் இந்த உணவைத் தான் செய்வார்கள். இந்த கொழுக்கட்டையை ஒரு வேலை உணவாகவும் சாப்பிடலாம். அதுவும் கேரளா ஸ்டைலில் ஒரு பால் கொழுக்கட்டை செய்தால் எப்படி இருக்கும். இந்த பதிவில் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ சர்க்கரை – 1கப்

✤ அரிசி மாவு – 2கப்

✤ உப்பு – ஒரு சிட்டிகை

✤ ஏலக்காய் – 13

✤ தண்ணீர் – சிறிதளவு

✤ தேங்காய்ப் பால் – 4கப்

இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும் அது கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆற விடவும்.

✤ ஏலக்காய் எடுத்து உரலில் வைத்து நன்றாகத் தட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும்.

✤ அதை நன்றாகக் கலக்கவும். அதில் ஆற வைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

✤ நன்றாக மென்மையாகக் கொழுக்கட்டை மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?Representative Image

✤ அதைச் சிறிய சிறிய உருண்டைகளைப் பிடிக்கவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நான்கு கப் அளவிற்குத் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ளவும்.

✤ அது நன்றாகக் கொதிக்கும் போது அதில் ஒரு கப் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

✤ அதில் ஒரு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதற்குப் பின், பிடித்த உருண்டைகளை அதில் சேர்த்து மீதமான சூட்டில் வைத்து வேக விடவும்.

✤ ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வேக விடவேண்டும். அதில் தட்டிய ஏலக்காயைச் சேர்த்து நன்றாக வேக விடவும்.

இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?Representative Image

✤ மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து அத்துடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். கரைத்த அரிசிமாவை வெந்த கொழுக்கட்டை கலவையில் சேர்க்க வேண்டும்.

✤ அது நன்றாக வெந்து வரும் போது ஒரு கப் அளவிற்குத் தேங்காய்ப் பால் சேர்த்து சில நிமிடங்கள் விட்டு அதை எடுத்தால் சூடான சுவையான பால் கொழுக்கட்டை தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்