Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image.

வாரத்திற்கு ஒரு நாள் கண்டிப்பாக உடலுக்குச் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது அவசியமான ஒன்று தான். அதனால் சிக்கனில் அதிகமாகச் சத்துகள் நிறைந்துள்ளது. 100 கிராம் சிக்கனில் 31 கிராம் புரதச் சத்துகள் நிறைந்துள்ளது. அது நம் தசைகளை அதிகமாக வலுப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்த பதிவில் ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபியாக ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ சிக்கன் – 250 கிராம் (எலுமில்லாத சிக்கன்)

✤ வெங்காயம் – 2

✤ குடைமிளகாய் – 3 ஸ்பூன்

✤ பூண்டு – 10 பற்கள்

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

✤ பச்சைமிளகாய் – 1

✤ வரமிளகாய் – 2

✤ மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

✤ தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

✤ உப்பு – ஒரு சிட்டிகை

✤ கொத்தமல்லி – சிறிதளவு

✤ மைதா மாவு – 200 கிராம்

✤ எண்ணெய் – சிறிதளவு

✤ தண்ணீர் – தேவையான அளவு

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் இரண்டு வர மிளகாய் எடுத்து அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைக்கவும். அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

✤ குடை மிளகாயை எடுத்துக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை எடுத்துக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

✤ கொத்தமல்லி தலை எடுத்துக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு எடுத்துத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

✤ அடுத்து 250 கிராம் அளவிக்கு எலுமில்லாத சிக்கன் எடுத்து அதை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவிய சிக்கனை எடுத்து மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

✤ 200 கிராம் அளவிற்கு மைதா மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்க்கவும். அதை நன்றாகக் கலக்கவும். அதில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

✤ அதைச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு, அதை 10 முதல் 20 நிமிடங்கள் ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

✤ அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அத்துடன் அரைத்த வரமிளகாய் பொடி சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய் குடைமிளகாய் சேர்க்கவும்.

✤ அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்க்கவும். அத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்த மல்லி தலையைச் சேர்க்கவும்.

✤ இவை அனைத்தைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். ஊற வைத்த மைதா மாவை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளைப் பிடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.

ஞாயிறு ஸ்பெஷல் ரெசிபி ஒரு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி ?Representative Image

✤ அந்த உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்துத் தேய்த்து ஒரு சிறிய வட்ட வடிவில் வந்த உடன், அதன் நடுவில் சிக்கன் கலவையை வைத்து அனைத்து பகுதியையும் அந்த வட்டத்தின் சுற்றி உள்ள மாவில் மூடி விட வேண்டும். இதைப் போல் உருட்டிய அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.

✤ அதற்குப் பிறகு, அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் ஊற்றி அதன் மேல் தட்டில் தயாரித்த சிக்கன் மோமோஸ் வைத்து வேக வைக்க வேண்டும்.

✤ அதை 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்த பின், எடுத்துப் பார்த்தால் சிக்கன் மேமோஸ் தயார். இதை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி போல் செய்து சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்