Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image.

தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் மற்றும் குழந்தைகள் பலரும் தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. அதனால் இன்றை ஸ்நாக்ஸ் அவல் சாப்பிட்டால் மிகவும் சத்து நிறைந்தவை.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

✤ இந்த அவல் வைத்து ஒரு ரெசிபி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். உடல் எடை குறைய டயட் இருந்தாலும் இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ அவல் – 1கப்

✤ கடலை மாவு – 8 டேபிள்ஸ்பூன்

✤ அரிசி மாவு – 8 டேபிள்ஸ்பூன்

✤ வெங்காயம் – 4

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

✤ சீரகம் – 3 டீஸ்பூன்

✤ பச்சை மிளகாய் – 4

✤ இஞ்சி – 2 துண்டு

✤ கருவேப்பிலை – சிறிதளவு

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

✤ கொத்தமல்லி – சிறிதளவு

✤ மிளகாய்த் தூள் – 1 டிஸ்பூன்

✤ உப்பு – ஒரு சிட்டிகை

✤ எண்ணெய் – தேவையான அளவு

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் அவல் ஒரு கப் அளவிற்கு எடுத்து அதை நன்றாகக் கழுவ வேண்டும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும். அதை 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.

✤ வெங்காயம் எடுத்துத் தோல் நீக்கி நன்றாகக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி எடுத்துத் தோல் சீவி நன்றாகக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

✤ நான்கு பச்சை மிளகாய் எடுத்து நன்றாகக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். கொத்தமல்லி எடுத்து நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

✤ அவல் ஊறிய பிறகு, அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்துக் கூட பயன்படுத்தலாம் அல்லது அப்படியே கூட பயன்படுத்தலாம்.

✤ அதில் எட்டு டேபிள் ஸ்பூன் அளவிற்குக் கடலை மாவு மற்றும் அரிசிமாவு அந்த அவல் உடன் சேர்த்துக் கலக்கவும். அதில் மூன்று டிஸ்பூன் அளவிற்குச் சீரகம் அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

✤ அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அவல் வடை செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் கருவேப்பிலை மற்றும் உப்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். ஒரு டிஸ்பூன் அளவிற்கு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

✤ இதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து வடை மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக பிசையவும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடான பின். கலக்கிய வடை மாவைச் சிறிதளவு எடுத்து உருண்டையாகப் பிடித்து அதை ஒரு தட்டுதட்டி எண்ணெய்யில் சேர்க்க வேண்டும்.

✤ அது வெந்த உடன் எடுத்தால் சூடான மற்றும் சுவையான அவல் வடை தயார். இதை மாலையில் ஸ்நாக்ஸ் ரெசிபியாக செய்து சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்