Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,923.11
116.96sensex(0.16%)
நிஃப்டி22,409.65
31.25sensex(0.14%)
USD
81.57
Exclusive

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..

Nandhinipriya Ganeshan October 17, 2022 & 23:00 [IST]
பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..Representative Image.

ஆணும் - பெண்ணும் ஒன்றிணைவதே உடலுறவு என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் ஆணும் பெண்ணும் மட்டும் ஒன்று சேர்வதே உடலுறவு கிடையாது. ஒரு பெண்ணும் - பெண்ணும் அல்லது ஒரு ஆணும் - ஆணும் ஒன்றிணைவது கூட உடலுறவு தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவருக்கு யார்மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார்களோ அவர்களிடமே உடலுறவு கொள்வார்கள். அப்படி நம் மீதே ஈர்ப்பு ஏற்பட்டு அன்பவை உணர்ச்சி மூலம் வெளிப்படுத்துவதே 'சுயஇன்பம்'. 

ஆண்கள் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் உண்டாகும் மோசமான பின்விளைவுகள்...

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..Representative Image

பொதுவாக சுயஇன்பம் எப்போதாவது செய்தால் அது உடலுக்கு நன்மை கொடுக்கிறது. ஆனால், ஒருமுறை இதன்மீது மோகம் வந்துவிட்டால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். போதை பழக்கம், மது பழக்கம் எப்படியோ அதுபோன்றுதான் இந்த சுயஇன்பமும். ஆனால், அளவுமீறி அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்டால் குறிப்பாக பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். 

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..Representative Image

சுயஇன்பத்திற்கு அடிமையாதல்

உலகின் பெரும்பான்மையானவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இதைப் பின்பற்றுகிறார்கள். மேலும், எதற்கும் அடிமையாவது தவறு. அதுபோல தான் சுயஇன்பத்திற்கும். நம்மில் பலர் இந்தச் செயலுக்கு அடிமையாகி விடுகிறோம், ஏனெனில் இது நமக்கு ஒரு நல்ல உணர்வைத் தருகிறது மற்றும் உடல் பதற்றத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. இருப்பினும், இது உங்கள் அன்றாட வேலைகளையும் உங்கள் உறவுகளையும் பாதிக்கலாம். மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதை நீங்கள் தவிர்ப்பீர்கள். இதனால், உங்கள் நட்பு மற்றும் காதல் உறவு பாதிக்கப்படலாம். அதேபோல், அதிகப்படியான சுயஇன்பம் உங்கள் பிறப்புறுப்புகளையும் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும்.

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..Representative Image

சுயஇன்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள்:

➤ பொதுவாக அதிகமாக சுயஇன்பம் செய்யும்போது கீழ் முதுகு வலி ஏற்படும் அபாயம் அதிகம். அதுமட்டுமல்லாமல், சுயஇன்பத்திற்கு அடிமையானவர்களுக்கு இடுப்பு வலி மற்றும் பிறப்புறுப்பில் வலி ஏற்படும். 

➤ அதேபோல், அதிகப்படியான சுயஇன்பம் திடீர் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இன்பத்தை கொடுப்பதற்காகவே, பெண்களின் உடலில் இருக்கும் மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு கிளிட்டோரிஸ். இது உடலின் பல்வேறு நரம்புகளை உள்ளடக்கியது.

➤ ஒருவர் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் இதன் உணர்திறன் குறையத் தொடங்கும். இதனால், பாலியல் செயல்பாடுகளின் போது உச்சநிலையை அடைய முடியாமல் போய்விடும். இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

➤ அடிக்கடி பெண்கள் சுய இன்பம் கொள்வதால் அவர்களின் பாலியல் உறுப்புகள் சேதமடைய கூடும். இது உடலுறவு வைத்து கொள்ள பெரிதும் தடையாக இருக்கும். அத்துடன் அந்த உறுப்புகள் வலுவிழந்து பாலியல் வாழ்க்கையில் மிக பெரிய விரிவை கொடுக்கும்.

➤ சுயஇன்பத்தை அனுபவிக்க பெண்கள் அவர்களின் பெண்உறுப்பை அடிக்கடி தொடுவதால், தொற்று ஏற்பட்டு பிறப்புறப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

➤ எனவே, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியத்திற்கு இணங்க எதையும் அளவோடு செய்து மகிழ்வோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். 

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..Representative Image

சுயஇன்ப அடிமையாதலில் இருந்து விடுபடுவது எப்படி?

➤ ஆபாசப் படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

➤ யோகா, தியானம், மூச்சு பயிற்சி, மசாஜ் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

➤ தனிமையை தவிர்த்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

➤ உங்களுடைய பணியில் பிஸியாக இருங்கள்.

➤ பாலியல் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற மனநல நிபுணர் அல்லது மருத்துவரின் உதவியை நாடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்