Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...

Nandhinipriya Ganeshan October 19, 2022 & 19:00 [IST]
தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...Representative Image.

பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதிலும் நம் நாட்டை பொறுத்துவரையில், இந்த பண்டிகைகளுக்கு பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் உள்ளன. அந்தவகையில், அனைத்து மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. தீபாவளி வந்தாலே பலகாரங்கள், பட்டாசு, புத்தாடை என படு ஜோராக இருக்கும். அதிலும் இந்த நல்ல நாளில் எண்ணெய் குளியல் எடுப்பதும் முக்கியமான வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...Representative Image

பொதுவாக எண்ணெய் குளியலின் போது குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், தீபாவளி அன்று மேற்கொள்ளும் எண்ணெய் குளியல் சற்று வேறுபட்டது. இந்த நாளில் நீராடுவதை "புனித நீராடல்" என்று குறிப்பிடுகின்றது. 

ஏனென்றால், தீபாவளி தினத்தன்று தண்ணீரில் கங்கையும், காவிரி தாயும் இருப்பதாக ஓர் ஐதீகம். அதுமட்டுமல்லாமல், நாம் எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தபடும் எண்ணெய்யில் லட்சுமியும், அரப்பு பொடியில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...Representative Image

தீபாவளி எண்ணெய் தயார் செய்வது எப்படி?

எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது. நல்லெண்ணெயில் சிறிதளவு மிளகு, வெள்ளைப்பூண்டு, சீரகம், பச்சரிசி சேர்த்து புகை மற்றும் நெடி ஏறாதவாறு காய்ச்சிக் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்படி எனக்கு காய்ச்ச தெரியாது என்று நினைத்தால், வெறும் நல்லெண்ணெயை மட்டும் பயன்படுத்துக்கொள்ளலாம். அல்லது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், மற்றும் தேங்காய் எண்ணெய் இதை மூன்றையும் சமஅளவு கலந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...Representative Image

இந்த எண்ணெயை உடல் முழுவதும் (தலைக்கும் சேர்த்து) தேய்த்து சுமார் அரை மணி நேரம் அப்படியே அமர்ந்துக்கொள்ளுங்கள். பின்னர், சீயக்காய், கடலைமாவு இரண்டையும் தண்ணீரில் சேர்த்து கலக்கி அரை மணிநேரம் ஊற வைத்து அந்தக் கலவையை உடல் முழுவதும் தேய்த்து கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிடுங்கள். சூரிய உதய வேளையில் குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

அதாவது, தீபாவளி அன்று அதாவது அமாவாசை தினத்தில், எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, நம் உடலுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது. இந்த காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் குறைந்து வருவதால், குறைந்த பட்சம் தீபாவளி அன்றாவது எண்ணெய் தேய்த்துக் குளித்து கங்கா ஸ்நானம் செய்யுங்கள். 

நேரம்: நேரம் 4 மணி முதல் 5.30 மணிக்குள் 

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் எண்ணெய் குளியல் நேரம்...Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்