Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கருத்துரிமையை பறிக்கும் காமராசர் பல்கலைகழகம்..! எம்பி கண்டனம்..!

Bala May 15, 2022 & 14:59 [IST]
கருத்துரிமையை பறிக்கும் காமராசர் பல்கலைகழகம்..! எம்பி கண்டனம்..!Representative Image.

மதுரை காமராசர் பல்கலைகழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் மாணவர்கள்  ஊடகங்களிடம் கருத்தை தெரிவிக்கும் முன் பதிவாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மே - 9 ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவிகள் விடுதிகளில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில், 10.05.2022 அன்றைய தினம், பல்கலை பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.அச்சுற்றிக்கையின் படி பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் ஊடகங்களிடம் கருத்தை  தெரிவிப்பதற்கு  பதிவாளரிடம் முன் அனுமதி  பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

எம்பி ரவிக்குமார் கண்டனம்:-

மதுரை காமராசர் பல்கலைகழக பதிவாளரின் சுற்றறிக்கைக்கு எம்பி ரவிக்குமார் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ஆசிரியர்கள் மற்றும், மாணவர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சட்சவிரோதமாகப் பிறப்பித்துள்ள இந்த ஆணையை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்றும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் 
பொன்முடி  அவர்கள் உடனே இதில் தலையிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.


பதிவாளர் சுட்டிக்காட்டிய விதி:- 

பல்கலைச் விதித் தொகுப்பு பிரிவு 8 ன் கீழ் உள்ள  விதி எண் 29 ஐ  (statutes 29 of chapter VIII Madurai kamaraj university calender vol.1) மேற்கோள் காட்டி பதிவாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு பல்கலைக் கழக விதித் தொகுப்பு பிரிவு VIll ஆனது பேராசிரியர்கள், தகைசால் போராசியர்கள், விரிவுரையாளர்கள், குறித்து பேசுகிறது. அவர்களது நியமனம்,கடமை உள்ளிட்ட நிர்வாக, அதிகார உரிமைகளை பற்றிப் பேசுகின்றது. அதிலும் மிகவும் குறிப்பாக பல்கலைக்கழகம் சுட்டுகிற 29 வது விதி இதுதான்.

"29. Notwithstanding anything contained in the foregoing Statutes, in the 
absence of any specific rules in existence in the University Statutes, the rules / 
orders of the Government of Tamil Nadu as applicable to the Government 
employees be followed in the case of University employees in similar 
circumstances."

அரசு ஊழியர்கள் தொடர்பிலான விதிகளில் பல்கலைக் கழகச் சட்டத்தில் ஏதேனும் விடுபட்டிருப்பின் தமிழ் நாடு அரசின் அரசு ஊழியர்களுக்கான விதிகளே பல்கலைக் கழக ஊழியர்களுக்கும் பொருத்தமானது. என விதி சொல்லும் போது, அரசு ஊழியர்கள், அல்லாத ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எப்படி இந்த விதி பொருந்தும்..? என்றும், மேலும் வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட பல்கலைக் கழகத் தொடர்பிலான செய்திகளுக்கு தான் பல்கலைக் கழகம் உரிமைக் கோரலாமே ஒழிய ஊடகங்களை ஒரு நாட்டின் குடிமகனாக ஒருவன் அணுகுவதற்கு எந்த தடையையும் ஏற்படுத்த முடியாது என கல்ல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்