Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 19 ஆம் நாளுக்கான [02 பிப்ரவரி 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

கணக்கு வழக்குகளை ஒழுங்காக கவனிக்காமல் சிறு நஷ்டம் அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் கவலையை ஏற்படுத்தும். வாழ்க்கையில் சந்தித்த சில முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும். சகோதரர்கள் வாகன விபத்தில் சிக்க நேரிடும். கவனத்தோடு இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும், பெரிய அளவிலான பண முதலீட்டை தவிர்ப்பது நல்லது. வீண்செலவுகளை தவிர்க்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். எதிர்பாலினத்தவரிடம் வீண் வாக்கவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சார்ந்த பயணத்தால் அலைச்சல் உருவாகும். வாழ்க்கை துணையால் குடும்பத்தில் பிரச்சனை வரும். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். மருத்துவ செலவுகள் உருவாகும். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணியிடத்தில் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னாடி ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். வாகன பயணத்தின் போது கவனமாக இருக்கவும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் அல்ல. நினைத்த காரியம் நிறைவேற தடை உண்டாகும். சில இடங்களில் சாமர்த்தியமான பேச்சு கைக்கொடுக்கும். நண்பர்களிடம் பேசும்போது அகந்தை பேச்சை தவிர்க்கவும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். திறமையாக செயல்பட்டு பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த சில விஷயம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. அன்பானவர்களின் மீது தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டாம். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சுபகாரியத்தில் தடை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. தோல்வி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வார்த்தையில் கவனம். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்பதை உணரும் நாள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவிஷயத்தில் ஏமாற வாய்ப்புள்ளது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். காப்பீடு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். எந்த செயலிலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். நெருங்கிய நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். பணியிடத்தில் சோர்வும், சலிப்பும் காணப்படும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். கண் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு வேண்டாத பிரச்சனை தலை தூக்கும்.. | 02 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்துக் கொள்வீர்கள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடியக்கும். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இருப்பினும், எதிர்பாலினத்தவரிடம் பேசும் போது கவனம் தேவை. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்