Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in Tamil

Gowthami Subramani Updated:
இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

கன்னி ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு எல்லா கிரக நிலைமையும் சிறப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக, பணத்தை அள்ளித் தரும் சுக்கிர பகவான் இந்த மாசி மாதத்தில் சிறப்பாக இருக்கிறார். அதே போல, குரு பகவானும் ஆட்சி பெற்று நல்ல புண்ணிய ஸ்தலத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, மீன ராசியில் பயணம் செய்வதால் நல்ல அருள் கிடைப்பதாக உள்ளது. செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து அருள் தருகிறார்.

இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

கடந்த மாதத்தில் இழு பறியாகவும், தேவையில்லாத கஷ்டங்கள் அனைத்தும் தரக்கூடியவையாகவே இந்த மாதம் அமைந்திருக்கிறது. இந்த மாசி மாதத்தில், உங்களுக்கு பண வரவு இரு மடங்காக இருக்கும். வியாபாரத்தில் செழிப்பான வளத்தைப் பெற்று அதில் இருமடங்கு லாபத்தை ஈட்டுவீர்கள். சரியான நேரத்தில் உங்களுக்குக் கிடைக்காத பணத்தொகை, இந்த மாதத்தில் விரைவாகவே கைக்கு கிடைப்பதாக அமையும்.

இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

சுக்கிர பகவானின் ஆசியுடன், திருமணம் சார்ந்த விஷயங்களில் ஒரு நல்ல அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். இது வரை இருந்த மனஸ்தாபங்கள், மன வருத்தங்கள் போன்றவை நீங்கி கணவ, மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல அனுகூலமான பலன்களைத் தரக்கூடியவையாகவே அமைகிறது. சனி பகவானின் ஆதிக்கத்தால், இன்னும் மூன்று வருடங்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு உச்சம் தொட்ட நிலையாகவே காணப்படும்.

இந்த மாசத்துல இது உங்களுக்கு நடந்தே தீரும்.! | Masi Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

இதுவரை மனதில் இருந்த பிரச்சனைகள், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகி நல்லதாகவே அமையும். பொருளாதாரப் பற்றாக்குறைகள் நீங்கி, அதிக அளவிலான லாபத்தை ஈட்டப் போகும் நிலையாக இந்த மாசி மாதம் உள்ளது. பணியிடத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி குழப்பங்களும் விலகும். கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகி சுமூகமான உறவைத் தரும். ஆக மொத்தத்தில் சனி, குரு பகவானின் ஆதிக்கத்தால் பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். உடல் நலம் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல பலன்களை பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்: கருட பகவான்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

சந்திராஷ்டம நாள்: மாசி 12 ஆம் தேதி காலை 08.52 மணி முதல் மாசி 14 ஆம் தேதி மாலை 03.19 மணி வரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்