Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in Tamil

Gowthami Subramani Updated:
மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image

மாபெரும் மாற்றங்களைப் பெறப்போகும் மிதுன ராசிக்காரர்களே, உங்களின் பூர்வ புண்ணிய அதிபதி சுக்கிரனும், குரு பகவானும், உங்களுடைய தொழில் ஸ்தான அதிபதியில் உள்ளனர். சத்ரு பகவானன, செவ்வாய் பகவான், மாசி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த மாதத்திற்குரிய முக்கிய பகவானன சூரிய பகவான், கும்ப ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான், எந்தவொரு சேர்க்கையும் இன்றி, 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். கடந்த மாதங்களில் செவ்வாய் பகவானால், பல்வேறூ நஷ்டங்களைச் சந்தித்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமைகிறது. அனைத்துக் காரியங்களிலும் இழுபறியாக இருந்திருக்கும். இதனால், பல்வேறு சூழல்களில் கஷ்டங்களைச் சந்தித்திருக்கலாம்.

மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image

வேலை இடங்களில் தேவையில்லாத விஷயங்கள் உங்களுக்குக் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். இந்த மாசி மாதத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதினால், இது ஒரு நல்ல சூழலை உருவாக்கும் நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த அனைத்துக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும். இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்று குரு பகவான் இருப்பதால், பண வரவு கிடைக்கும். வேலையிடத்தில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்லவையே நடக்கும். வியாபாரத்திலும் லாபம் இருமடங்காகும்.

மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image

பணியில் கடந்த மாதத்தில் சரியான நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய தொகை வராமல் போகலாம். ஆனால், இந்த மாதம் அனைத்து தொகையும் சரியான நேரத்திற்கு வந்து சேரும். திருமணம் ஆகாத நபர்களுக்கும், வரன் கை கூடி வரும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல அனுகூலமான பலன்களைத் தரும் விதமாக இந்த மாசி மாதம் இருக்கும். கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி புரிதல் அதிகரிக்கும். அஷ்டம  ஸ்தானத்தில் இருந்த சனி பகவான், பாக்கிய ஸ்தானமாகிய 9ஆம் இடத்திற்கு வந்ததால், மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானால் நன்மை மட்டுமே உண்டாகும். வேலையிடத்தில் பணி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரங்களுக்கு அடிச்சது பாரு அதிர்ஷ்ட யோகம்! | Masi Month Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image

இதுவரை வியாபாரம் நன்றாக இருந்திருப்பினும், பணப்புழக்கம் இல்லாத நிலை இருந்திருக்கும். ஆனால், இந்த சூழல் மாறி சுபங்களைத் தரக்கூடிய மாதமாக இந்த மாசி மாதம் அமைகிறது. குரு பகவானின் ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். உடல் நலம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றங்கள் நிகழும். கடின உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

சந்திராஷ்டம நாள்: மாசி 5 ஆம் தேதி இரவு 11.21 மணி முதல் மாசி 7 ஆம் தேதி இரவு 01.35 மணி வரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்