Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Gowthami Subramani Updated:
நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி, நீங்கள் நினைத்தது நிறைவேறப் போகும் நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பார்க்கும் வேலையை விட்டு வேலை தேடும் நபர்களுக்கும் இது சிறப்பான மாதமாக அமைகிறது. வேலையைப் பொறுத்த வரை எந்த வித பாதிப்பும் இல்லை. உங்கள் துறை சார்ந்த அரசு வேலையில் சேர்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். இந்த மாதத்தில் வேலையில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

பணியில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு என அனைத்துமே சிறப்பாக உள்ளது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. வங்கிக் கடன் வாங்குபவர்கள் இதுவரை நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இதுவரை இருந்த இழுபறிகள் அனைத்தும் விலகி உடனடியாக நிறைவேறும். வங்கிக் கடன் பெறுதல், கொடுத்த கடனை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அனைத்தும் நடக்கும் மாதமாக அமைகிறது. பதவி உயர்வு சிறப்பைத் தருவதுடன், எதிர்பார்த்த பணியையும் தரும்.

நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல ஒரு லாபத்தையே பெறப்போகும் நல்ல காலமாக அமைகிறது. தேவையில்லாமல் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்க வேண்டாம். வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்த மாதத்தில் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. எதிர்பாராத வகையில் செலவு உண்டாகலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிறிய உடல் நலப் பிரச்சனையாக இருந்தாலும், மருத்துவரை அனுசரிப்பது நல்லது.

நீங்க நினைச்சது நடக்க கும்ப ராசிக்காரங்க இத கண்டிப்பா செய்யணும்..! | Masi Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு சார்ந்த துறைகளில் சேர்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள், உங்களின் எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போகும் நாளாக அமைகிறது. வேலை மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். முதலீடு செய்வது நல்லது. இருப்பினும், நன்கு ஆராய்ந்து பிறகு அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். பேச்சுத் திறமையால், நல்ல வளமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த மாசி மாதம் முழுவதும் உங்களுக்குச் சிறப்பான மாதமாகவே அமைகிறது.

வணங்க வேண்டிய தெய்வம்: சிவப் பெருமான்

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

சந்திராஷ்டம நாள்: மாசி 24 ஆம் தேதி காலை 09.42 மணி முதல் மாசி 26 ஆம் தேதி மாலை 06.18 மணி வரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்