மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் சிம்மம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த மாதம் சூரிய பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்ததால் எல்லாமே தலைகீழாகத் தான் நடந்திருக்கும். வேலை இடத்தில் சிக்கல், தொழிலில் வீழ்ச்சி, குடும்பத்தில் சங்கடம் என்று நிம்மதியாக இருக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசிக்கு சூரிய பகவான் களஸ்தர ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. இதனால் உங்களுக்கு ஒரு விதமான சோம்பல், மன உளைச்சல் என்று இருக்கும் நிலை மாறி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் மாதம் இது.
தொழில் ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருப்பதால் பண வரவு மற்றும் லாபம் அமோகமாக இருக்கும். வியாபாரம் செய்வதாக இருந்தால் துவண்டு போன நிலை மாறி நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் தள்ளி போகும் நிலையில் இருக்கும் சிம்ம ராசியினருக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். அதே போல கருத்து வேறுபாட்டுடன் இருக்கும் தம்பதிகளுக்கு இடையில் அந்யோனியம் அதிகரிக்கும் காலம் இது. மேலும் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் மன கஷ்டத்தில் இருக்கும் நிலை மாறி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாசி மாதத்தில் சிம்ம ராசிக்கு சனி பகவான் கஸ்தர ஸ்தானத்திற்கு வந்துவிட்டதால், சுக்கிரனின் அருள் இருந்தாலும் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது வாழ்க்கைக்கு நல்லது.
என்ன தான் கடினமாக வேலை செய்தாலும் நிம்மதி இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் கடுமையான சூழ்நிலை விலக ஆரம்பிக்கும். நீங்கள் நீண்ட கலமாக எதிர்பார்க்கும் பதவி உயர்வு உங்களுக்கு
கிடைக்கும் வாய்ப்புள்ளது. குரு பகவானின் பார்வையால் புது வாகனங்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. உடல் நலத்தில் இன்னல் இருந்தால் அதில் முன்னேற்றம் ஏற்படும். கடின வேலை செய்யும் காலம் என்பதால் தளர்ச்சி அடைய வேண்டாம். கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். மேலும் வேலை மாற்றம் குறித்த சிந்தனை இருந்தால் இந்த மாதம் அதற்கு உகந்த மாதம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு, மரியாதை வரவில்லை என்றால் கவலை வேண்டாம். சரியான காலம் வரும் வரை காத்திருங்கள். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் படிக்க ஆரம்பிப்பீர்கள். இருப்பினும் நண்பர்களுடன் சற்று தள்ளி இருப்பது நல்லது. உயர்கல்வியாக எதை படிக்க விரும்புகிறீர்களோ அதற்கான முயற்சியை எடுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
சந்திராஷ்டம நாள்: மாசி 5 ஆம் தேதி இரவு 11.21 மணி முதல் மாசி 7 ஆம் தேதி இரவு 01.35 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…