மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் விருச்சகம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கடந்த மாத மிகவும் வகிரம்மான நிலையில் இருந்ததால் உங்களுக்கு எல்லாமே கஷ்டங்களை மட்டுமே தந்திருப்பார். ஒரு குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் இருந்திருப்பீர்கள். ஏதேனும் காரணத்திற்காக சற்று பதற்றத்துடன் இருந்திருக்கலாம். நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் நடக்காமல் போகலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வேலை இடத்தில் நிம்மதி இல்லாமல் என்று மாறி மாறி சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த மாசி மாதத்தில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்திப் பெற்று ரிஷப வீட்டில் இருப்பது அமோகமான அமைப்பாகும். மேலும் சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் உச்சமாக இருப்பதால் வேலை அல்லது தொழில் சார்ந்த இடங்களில் பண வரவு அதிகரிக்கும். லாபம் ஈட்டும் மாதமாக இந்த மாசி மாதம் அமையும். அது மட்டும் இன்றி திருமணமான தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மேலும் திருமணம் ஆகாமல் காத்திருக்கும் விருச்சிக ராசியினருக்கு கூடிய விரைவில் திருமண வரன் கிடைக்கும்.
கிரகங்களின் விளையாட்டால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டிருக்கலாம். அவை சுக்கிரனின் கிருபையால் முற்றிலும் விலகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவானை ஆட்சி செய்வதால் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். செயலில் நன்மை இருந்தாலும் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை எந்த ஒரு செயலையும் வெற்றி அடைய செய்யாமல் வைத்திருக்கும். அவை இந்த மாசி மாதத்தில் முற்றிலும் நீங்கும் வாய்ப்புள்ளது. பொருளாதாரம் நன்றாக இருக்கும், தேவைக்கேற்ப செலவு செய்யு அளவிற்கு வருமானம் கிடைக்கும்.
உயர் அதிகாரிகளுடன் சமரச நிலைக்கு வந்து விடுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு மற்றும் வாகன மாற்றங்கள் ஏற்படும் காலம் இது. உடல் நிலை சீராக இல்லாமல் இருந்தால் அதில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை மாற்றம் குறித்த சிந்தனை இருந்தால் அதற்கான முயற்சியை எடுங்கள். அதிக சம்பளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும். மாணவர்கள் தீர்மானத்துடன் படிக்க ஆரம்பிப்பீர்கள். நீங்கள் நினைத்த காரிய கண்டிப்பாக நிறைவேறும்.
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1
சந்திராஷ்டம நாள்: மாசி 16 ஆம் தேதி இரவு 12.15 மணி முதல் மாசி 19 ஆம் தேதி பகல் 11.12 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…