Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image.

மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! இந்த மாசி மாதத்தில் உங்க ராசிநாதன் 2ஆம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இந்த மாதம் முழுவதுமே உங்களுக்கு அற்புதம் தான். ஏனென்றால், கடந்த சில மாதங்களாகவே வக்கிரநிலையில் இருந்த செவ்வாய் பகவானால் காரியத் தடை, புதிய முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம், கொடுக்கல் வாங்கலில் இழுபறிகள், உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். ஆனால், இந்த மாதத்தில் வக்கிரநிவர்த்தி பெற்று நேர்கதியில் சஞ்சாரம் செய்யவிருப்பதால், பணியிடத்தில் இருந்த மனகஷ்டங்கள், தடைகள் அனைத்தும் விலகி . சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உருவாகும்.

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

தொழிலில் இருந்த இழுபறிகள் நீங்கி, பணச்சேர்க்கை உண்டாகும். மேலும் சுக்கிர பகவான் உச்சமாக இருப்பதால் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த மேஷ ராசியினருக்கு திருமணவரன் கூடி வரும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்கள் அனுகூலப் பலன்களை கொடுக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம், பிரச்சனை அனைத்தும் விலகி அன்னோநியம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களால் எழுந்த வீண் பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். 

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

சனிபகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வருகின்ற 3 வருடங்களுக்கு தொட்டது துலங்கும். கடன் தொல்லைகள், குடும்ப சிக்கல்கள் விலகும். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதமான பலனை கொடுக்கும். தொழில் சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கு வெற்றிகரமான சூழல் அமையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். பெண்குழந்தைகள் மட்டும் இருந்த ஆண்வாரிசுக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். குருபகவான் 5ஆம் பார்வையாக சுகஸ்தானத்தையும், 7ஆம் பார்வையாக சத்துரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறது. இதனால், புது வீடு வாங்கி குடியேறும் வாய்ப்பு உருவாகும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மேலும், மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்கும் மாதமாகவும் இந்த மாசி மாதம் இருக்கும்.

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்.. | Masi Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

இருப்பினும், கேது பகவான் உங்க ராசிக்கு 7ஆம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையுடன் அவ்வப்போது மனச்சங்கடங்கள் எழும். எனவே, நீங்க அனுசரித்து நடந்துக் கொள்வதும், பொறுமையை கடைப்பிடிப்பதும் அவசியம். 

வணங்க வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

சந்திராஷ்டம நாள்: 

  • மாசி 1 ஆம் தேதி மாலை 04.42 மணி முதல் மாசி 3 ஆம் தேதி இரவு 08.37 மணி வரை
  • மாசி 28 ஆம் தேதி இரவு 12.30 மணி முதல் பங்குனி 1 ஆம் தேதி மாலை 04.35 மணி வரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்