Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் 12 ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மேஷம்:

ராகு பகவான் சுய ஸ்தானத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த சூழல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். மன அழுத்தத்தால் உடல் ரீதியான நோய்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் நேர் வழியில் சஞ்சாரம் செய்வதால் தெளிவில்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மேலும் அவருடன் சந்திர பகவான் இருப்பதால் முன்கோபத்துடன் இருப்பீர்கள். அதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை உண்டாகலாம்.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ரிஷபம்:

ரிஷப ராசிக்கார்கள் இந்த பிப்ரவரி மாதத்தில் அதிக முன்கோபத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் குடும்பத்தில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மனக்கசப்பு ஏற்படலாம். எனவே, உங்களுக்கு ஏற்படும் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது உத்தமம். நீங்கள் நினைத்த காரியம் வெற்றிப்பெற கடினமாக உழைப்பீர்கள், அதற்கான வெற்றியையும் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவால் இதுவரை முடிக்க முடியாத செயல்களையும் செய்து முடிப்பீர்கள்.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மிதுனம்:

பிள்ளைகளால் கவலை ஏற்படும். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். குடும்பத்தை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். கோபத்தால் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். முடிந்த வரை அனுசரித்து பிரச்சனையை முடித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு குழப்பத்திலையே இருப்பீர்கள். மன நிம்மதி இல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் இருப்பீர்கள். அதிக ஆசையால் ஏதேனும் ஒரு தேடலில் இருப்பீர்கள். நீங்கள் நினைத்த காரியத்தை நோக்கி பயணிக்கும் போது எதிர்பாராத தடங்கல் ஏற்படும்.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கடகம்:

ஆங்கில மாதங்களில் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில், கடக ராசி மற்றும் கடக லக்னம் உள்ளவர்களுக்கு, நான்காவது வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார். இது அந்த அளவுக்கு நல்லவற்றைத் தராது. ஜனவரி மாதத்தில் இருந்தது போல, எல்லா விஷயங்களும் உங்களுக்கு இருந்தாலும், அதை உங்களால் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இது மன விரக்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். எதாவதொரு சிந்தனை உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது முக்கியம். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சிம்மம்:

சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் மகர ராசியில் இருந்தும் கும்ப ராசிக்கு பெயற்சிக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி சூரிய பகவான், சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஒன்றாக சேர்வது உங்கள் தொழில், வேலை சார்ந்த விஷயங்களுக்கு நல்ல வளர்ச்சியை தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அல்லது நீங்கள் விரும்பிய இடமாற்றம் அமையும். அது மட்டும் இல்லாமல் பணி இடங்களில் ஒரு சில கருத்து வேறுபாடு இருக்கலாம்.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கன்னி:

பொருளாதாரத்திலும் உங்களது உயர்வு நன்றாக இருக்கும். கடனை அடைப்பதற்கும், செல்வம் சேர்தல் என பொருளாதார ரீதியாக நல்ல பயன்கள் கிடைக்க உள்ளது. கெட்டவை அனைத்தும் விலகி, நல்லவை அனைத்தும் கூடும். திருமணப் பலன் அருமையாக உள்ளது. இந்த பிப்ரவரி 15-க்குப் பிறகு, குரு மற்றும் கேது என இருவருமே இணைந்து அற்புத பலன்களைத் தர உள்ளனர். திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் ஆகாத நபர்களுக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

துலாம்:

இதுவரை மந்தமாக இருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலனைப் பெறப்போகிறார்கள். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை, இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்ல நிலைமையை அளிக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு, ராகு கேது அமர்வினால் இதுவரையிலுமே தடைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம், திருமணம் நடைபெறுவதற்கான காலம் இது சரியானதாக இல்லை.

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

விருச்சிகம்:

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில், விருச்சிக ராசியைப் பொறுத்த வரை ஐந்தாம் இடத்தில் குரு, அர்த்தாஷ்டம சனி போன்றவை இருப்பதால், பெரிதளவிலான பாதிப்பு எதுவும் இல்லாமல் அமைய உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இது பொருளாதாரத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கூடுதல் பொறுப்புகளைக் கையாளும் நேரம் வரும் போது, அது உங்களுக்குக் கஷ்டங்களைத் தரலாம். இதனால், வேலையை மாற்ற வேண்டிய எண்ணம் தோன்றும். 

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

தனுசு:

பணியில் இருப்பவர்கள் இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பட்ட கஷ்டத்திற்கு உண்டான பாராட்டு கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமணம் தள்ளிப்போன அனைத்து தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த முறை திருமண யோகம் கிடைக்கும். காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல காலம். சிலருக்கு காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி, அன்பு அதிகரிக்கும். 

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மகரம்:

ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியால், உங்களுக்கு பாத சனி தொடங்கியிருக்கிறது. இதனால், உங்களுக்கு இனி நிவர்த்தி நிறைந்த காலக்கட்டமாக இருக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் சருமம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மேலும், இந்த மாதத்தில் சூரிய பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சுப விரைய செலவுகள் வந்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல், புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தண்ட செலவுகளும் அடுக்கடுக்காக வந்துக்கொண்டே இருக்கும். 

மேலும் படிக்க

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

கும்பம்:

மீனம்:

ஏழரை சனியின் ஆரம்பம், விரைய சனி காலக்கட்டம் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு ஒரு அனுபவம் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவனால் வாக்குவாதம் அதிகம் ஏற்படும். தேவையில்லாத பேச்சு அதிகமாகவே இருக்கும். நிம்மதியின்மை நிறைந்த மாதமாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு அரசாங்கத்தினால் பிரச்சனைகள் வரும்.

மேலும் படிக்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்