Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil

Priyanka Hochumin Updated:
சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil Representative Image.

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஜோதிடத்தின் அடிப்படையில் தான் நடக்கும். மேலும் நவக்கிரகத்தில் இருக்கும் கடவுள்களில் எந்த கடவுளின் திசையில் மாற்றம் ஏற்பட்டால் நம்முடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து தன்னுடைய ராசியான கும்பத்தில் பெயர்ச்சியாகிறார். இவரின் இந்த நிலை மாற்றம் யாருக்கெல்லாம் நற்பலன்களை அளிக்கும் என்பதைப் பற்றி பாப்போம்.

சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil Representative Image

வரும் ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் ரிஷபம், துலாம் மற்றும் மகர ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்க உள்ளது. அது மட்டும் இல்லாமல் அடுத்த 15 நாட்களுக்குள் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி சனி அஸ்தமனமாகிறார். இதுவரை நடந்திராத வகையில் இந்த சனி பெயர்ச்சி நடைபெறுவதால் உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழவிருக்கிறது. அதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil Representative Image

ரிஷபம்

இதுவரை சனியின் தாக்கத்தில் இருக்கும் ரிஷப ராசிக்கு இந்த பெயர்ச்சியானது நன்மைகளை அள்ளித்தரும் காலமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியான தடங்கல்கள் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும். முதலீடு, வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களுக்கு வராமல் இருந்து பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். மொத்தத்தில் இது உங்களுக்கான காலம் மதிப்பு, மரியாதை என்று வெற்றியின் உச்சத்தை தொடுவீர்கள்.

சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil Representative Image

துலாம்

சனி பெயர்ச்சியில் சுபநிகழ்வு நடக்கும் ராசிகளுள் துலாம் ராசியும் ஒன்று. தொழிலில் எதிர்பார்த்த அதிஷ்டம் கிடைக்கும். நீங்கள் வரவே வராது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பண வரவு உங்களை வந்து சேறும். கல்வி பயிலும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் மேற்படிப்பினை  பயில்வார்கள். புதிய மனை, வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் அமையும். உடல் ரீதியான தொந்தரவுகள் இருந்தால் அது விலகிவிடும்.

சனி பகவானின் நிலை அடுத்தடுத்து மாறுவதால் இந்த ராசிக்கு ராஜயோகம் | Sani Peyarchi in Tamil Representative Image

மகரம்

சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகுவதால் பல நன்மைகளை தர உள்ளார். உங்களுக்கு வந்து சேர வேண்டிய அனைத்து நன்மைகளும் ஒவ்வொன்றாக வரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, தடையான காரியங்கள் கை கூடி வரும், பண வரவு அதிகரிக்கும், பொருளாதாரம் அமோகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த புது வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எப்படி சனி உங்களை விட்டு போகும் போது தாராளமாக கொடுப்பார் என்று சொல்வதற்கு ஏற்ப மகர ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையை கொடுக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்