Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023

Gowthami Subramani Updated:
பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023Representative Image.

நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை சனிபகவான் அருள்வார். சனிபகவான் செய்யும் கிரகங்களின் தாக்கமும், பலன்களும் கிரகங்களின் நிலையை மாற்றக் கூடியதாக அமைகிறது. கிரகங்களின் சஞ்சாரமானது அனைவரது வாழ்க்கையையும் பாதிப்பதாகவே அமைகிறது. இந்த ஜனவரி மாதம் 17 ஆம் நாள் நடக்கக் கூடிய சனிப்பெயர்ச்சியினால், ஒரு சில ராசிக்காரர்கள் அவரவர்களின் கிரகநிலையை அடிப்படையாகக் கொண்டு பலன்களைப் பெறுவர். அதன் படி, இந்த சனிப்பெயர்ச்ச்சியினால் மகிழ்ச்சியுடன் காணப்படும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.

பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023Representative Image

ரிஷபம்

சனியின் ராசி மாற்றத்தால், சனி பகவான் ரிஷப ராசிக்கு நன்மை தர உள்ளார். இந்த ராசி மாற்றம், ரிஷப ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டிற்கு சனி பகவான் செல்வார். இதனால், நீங்கள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப் போகும் நபர்களாக இருப்பர். மேலும், இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகி, தெளிவான முடிவுகள் பிறக்கும். இது உங்களுக்கு மேன்மையைத் தரும்.

பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023Representative Image

மகரம்

இந்த சனிப்பெயர்ச்சியானது, மகர ராசிக்காரர்களுக்கு மாபெரும் உச்சத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. இந்த சனிப்பெயர்ச்சியினால், மகரத்தின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களது செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருமானத்தையும் சேமிப்பையும் உயர்த்துவார். இது அவர்களின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும். மேலும், சனியின் ஆசிர்வாதம் உங்களுக்கு மழையாய் பொழியுமாறு அமையும்.

பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023Representative Image

மேஷம்

இந்த சனிப்பெயர்ச்சியினால், மேஷ ராசியினர்களுக்குக் கிடைக்கும் பலனானது. அவர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கக் கூடியவையாக அமையும். இந்த சூழ்நிலையில், பண வரவு, சொத்து சேர்ப்பது முதலிய விஷயங்களில் அதிர்ஷ்டம் பெற்று பிரகாசிக்கப் போகிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும் முன்னேற்றப் பாதைக்கும் செல்லும் ராசிக்காரர்களாக மேஷ ராசிக்காரர்கள் இருப்பர். இதனால், இவர்களது வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பணத்தை வாரி வழங்கும் சனி பகவான்.! அதிர்ஷ்டத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிகள்.! | Sani Peyarchi Palangal 2023Representative Image

கன்னி

2023 ஆம் ஆண்டு நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், கன்னி ராசிக்காரர்களுக்கு எதிரிகளை வெல்லும் யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் அனைத்து விஷயங்களிலும் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது. சனிப்பெயர்ச்சியினால் நோய்கள் விலகுவதுடன், வலிமையும் அதிகரிக்கும். இதன் மூலம், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்