Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 03 ஆம் நாளுக்கான [17 மார்ச் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 12.30 - 01.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீங்க ஆசைபட்ட பொறுப்பை அடைவீர்கள். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். இருப்பினும், மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் உதவி தேடி வரும். சுயதொழில் செய்வோருக்கு லாபம் எப்பவும் போல இருக்கும். துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். கூர்மையான பொருட்களால் ஆபத்து உண்டு; ஜாக்கிரதையாக இருக்கவும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் நாள். பணியிடச்சூழல் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதனால், சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையால் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

அனுகூலமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடியும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கனவுகள் நனவாகும் நாள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எனவே, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அதிர்ஷ்டமான நாள். விருப்பங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஆரம்பத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். இருப்பினும், வெற்றி உறுதி. ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சகஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவும் அற்புதமாக இருக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் செலுத்தவும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அதிக சிந்தனை உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும். விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை முக்கியம். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். அதேபோல், எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொருப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. உஷாரா இருங்கள். ஒரு புதிய நபரால் குடும்பத்தில் பிரச்சனை தலைதூக்கும். வியாபாரத்தில் லாபம் எப்பவும் போலவே இருக்கும். பயணத்தின் போது பண இழப்பிற்கு வாய்ப்புண்டு, கவனம் தேவை. முக்கிய பணிகளை தள்ளிப்போடாமல் உடனே செய்துவிடுவது நல்லது. மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.. யாருக்கு? | Tomorrow Rasi Palan in Tamil | 17.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். பணியிடத்தில் உங்களுக்கு கோபம் ஏற்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடக்கலாம். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். இணையம் சார்ந்த தொழிலில் போட்டி அதிகரிக்கும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். நோய்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்