Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 20 ஆம் நாளுக்கான [03 பிப்ரவரி 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

அஜாக்கிரதையால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணஉதவி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

சாதகமான நாள். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். சிலருக்கு கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பணியிடத்தில் சகபணியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

நேர்மறையான அணுகுமுறை மூலம் அசாத்தியமான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். எனவே எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சற்று மந்தமாக காணப்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். விலங்குகளிடம் இருந்து தள்ளி நிற்கவும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகள் அதிகரிக்கும் நாள். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் பார்த்து நடந்துக் கொள்ளவும். பயணத்தின்போது பணயிழப்பிற்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். சிலர் புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். ரகசியத்தை பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். விபத்தில் சிக்கல் வாய்ப்புள்ளது வாகன பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சிலர் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்றும், பிடித்த பொருட்களை வாங்கியும் மகிழ்ச்சி காண்பீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தொழிலுக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றுவீர்கள். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஏற்படும் மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவித செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. துணையிடம் ஈகோவை தவிர்ப்பது நல்லது. மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட ஆசை நிறைவேறும் நாள். அம்மா வழி உறவினரால் அனுகூலப் பலன் உண்டு. ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். வண்டி, மொபைல் ஃபோன் வாங்கும் யோகம் உண்டு. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும்.. | 03 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் தடைபடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். அஜாக்கிரதை காரணமாக விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளது. வரவு செலவு இரண்டும் இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்