Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 11 ஆம் நாளுக்கான [25 மார்ச் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். இருப்பினும், பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். அநாவசியமாக தெரியாதவர்களிடன் பேச வேண்டாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சேமிப்பு உயரும். உங்க துணையுடன் மறக்க முடியாத நாளாகவும் இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பணியிடச்சூழல் சாதகமாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணியிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். சொந்த தொழில் செய்வோருக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணிச்சுமையால் செம சோர்வில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைக்கும். சிலருக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். நண்பர்களிடன் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். எச்சரிக்கையாக இருங்கள். எந்த விஷயத்திலும் அவரசம் காட்டாமல், பொறுமையோடு கையாளுவது நல்லது. உங்க துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பணவரவு சற்று குறைவாக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைக்கவும். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தந்தைவழி உறவினரால் சலசலப்பு ஏற்படும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வருமானம் சிறப்பாகவே உள்ளது. வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். கொஞ்சம் கவனம் தேவை. கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் மூலம் உங்க திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணையுடன் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். பயணங்களின் போது பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. கண்கள் சம்பந்தமான பிரச்சனை வாய்ப்புள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி இருக்கும். ஆனால், அதையெல்லாம் சமாளித்து பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கையில் நன்மை தீமையை அறிந்துக் கொள்ளும் நாள். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும்.  வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது மட்டும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். மனைவியிடம் இருந்து மகிழ்ச்சி தரும் செய்து கிடைக்கப் பெறுவீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. புதிய நபரால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வியாபாரத்தில் இழுபறியாக இருந்த தனவரவு வசூலாகும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதுவரை கடுகடுவென்று நடந்துக்கொண்ட உங்க பாஸ் இன்று கூலாக நடந்துக் கொள்வார். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை ஏற்படுத்தும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை ஏற்படுத்தும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பேரக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு ஃபோன் மூலம் சுபச்செய்தி காத்திருக்கிறது.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பல சவால்களை சந்திக்க தயாராக இருந்துக் கொள்ளுங்கள். ஓய்வு என்பதே கிடைக்காது. அதுவே வெறுப்பை உண்டாகும். வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். துணையின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. வங்கி சம்பந்தமான விஷயங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையோடு இருக்கவும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்