Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?

Gowthami Subramani October 12, 2022 & 20:00 [IST]
மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image.

பணம் சேமிப்பு மற்றும் முதலீடு என்பது ஒருவரின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். பணத்தைச் சேமிக்க அனைவருக்கும் அதிகமான பயன்பாடுகளில் ஒன்றாக விளங்குவது தபால் அலுவலகம் ஆகும். அதன் படி, மாதந்தோறும் ரூ.5,100 சேமிப்பதன் மூலம், ரூ.19 லட்சம் பெறுவதற்கான திட்டம் உள்ளது. இது குறித்து தெளிவான விவரங்களைப் பற்றி இதில் காண்போம். எதிர்கால வாழ்விற்கு இன்றே நன்முறையில் சேமிப்போம்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

பணவீக்கம் அதிகரிப்பு

கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான தாக்குதல் போன்றவற்றால், பணவீக்கம் அதிகமாகி பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வெகு விரைவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நமக்கு சேமிப்பு அல்லது முதலீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கிராம சுமங்கல் யோஜனா

தபால் அலுவலகத்தில் ஏராளமான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், கிராம சுமங்கல் யோஜனா என்ற திட்டத்தைப் பற்றி இதில் காணலாம்.

கிராம சுமங்கல் திட்டம் என்பது தபால் துறையின் கீழ் செயல்படக்கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது, பாதுகாப்பான சேமிப்பு முறையாக, கிராமப்புற மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைகிறது. முக்கியமாக, கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தொடர் வைப்புத் தொகை அல்லது ஃபிக்ஸ்டு டெபாசிட் அல்லது ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக விளங்கி, சேமிக்கும் பணத்தை திரும்ப அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் அடங்கும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கால அளவு

தபால் அலுவலக சேமிப்பு திட்டமாக வழங்கும் கிராம சுமங்கல் திட்டம் இரண்டு வகையான திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று 15 ஆண்டுகால பாலிசி, மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி ஆகும்.

இதில், முதலாவது ஆயுள் காப்பீடு திட்டமாக விளங்குவது 20 ஆண்டுகால பாலிசி ஆகும். இது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமாகும்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

15 ஆண்டுகால சேமிப்பு

இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் 15 ஆண்டுகாலம் ஆயுள் காப்பீட்டு பாலிசி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இதில், பாலிசிதாரர்கள் 6 ஆண்டுகள், 12 ஆண்டுகள், மற்றும் 16 ஆண்டுகளில் 20-20% பணத்தைத் திரும்பப் பெறலாம். அதே சமயம், திட்டத்தில் தொடர்ந்து வைப்பு நிதியாக வைப்படும் போது, Assured மற்றும் Bonus-ஆக 40% வரை வழங்கப்படும்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

20 ஆண்டுகால சேமிப்பு

கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், பயனர்கள் முதலீடு செய்திருந்தால், 8 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையில் 20-20% என பணத்தைத் திரும்ப பெறலாம். 15 ஆண்டுகால சேமிப்பு முறையைப் போலவே, சேமிப்பு முதிர்ச்சி அடையும் போது 40% பணத்தை போனஸாக வழங்கப்படும். தற்போது, ஆயிரம் ரூபாய்க்கு போனஸாக ரூ.45-ஐ இந்திய அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. அதன் படி, ரூ.1 லட்சம் ரூபாய்க்கான வருடாந்திர போனஸாக ரூ.4500 ஆக இருக்கலாம்.

மாதம் ரூ.5,100 முதலீட்டில் ரூ.19 லட்சம் வருமானம் ஈட்டலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

மாதம் ரூ.5,121 சேமிப்பு. ரூ.19 லட்சம் பெறுவது எப்படி?

ஒருவர் 25 வயதில் பாலிசி வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகும். இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக ரூ.16.75 லட்சமாக கிடைக்கும். இதுவே 20 ஆண்டுகளுக்குப் பின் பாலிசிதாரர்கள் மொத்தமாக ரூ.19 லட்சம் வழங்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்