Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57
Exclusive

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed movies

UDHAYA KUMAR Updated:
சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image.

நடிகர் ஜீவாவின் மார்க்கெட் குட்டிச் சுவரானதற்கு காரணம் அவரின் கதைத் தேர்வுதான். ஆரம்பத்தில் ஆசை ஆசையாய், தித்திக்குதே, ராம் என படங்களின் கதையைத் தேர்ந்தெடுத்த ஜீவா, அதன்பிறகு பெரிய அளவில் நல்லகதையைத் தேர்வு செய்யாமல் விட்டது அவரின் வீழ்ச்சிக்கு காரணமாகும். 

இடையில் கோ, ஈ, கற்றது தமிழ் போன்ற நல்ல படங்களிலும் நடித்தார் என்றாலும் மற்ற படங்கள் அவரைக் காப்பாற்றவில்லை. பின்னர் சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் நன்கு பாராட்டப்பட்டவர் அடுத்தும் தோல்விப் படங்களை வரிசையாக அடுக்கி மக்களிடமிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார். 

இப்படி மார்க்கெட் இழந்த ஜீவாவின் இந்த நிலைக்கு காரணமாக முக்கியமான 5 படங்களைத் தான் இந்த பகுதியில் பார்க்கவிருக்கிறோம்

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image

யான் 

2014ம் ஆண்டு ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்த யான் திரைப்படத்தை ரவி கே சந்திரன் எழுதி, இயக்கியிருந்தார். இந்த படத்தை எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். 

ஜீவா, துளசி நாயர், நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்த இந்த படத்தின் கதை மக்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மட்டும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன. ஆனாலும் படம் பிளாப் ஆனது சோகம்தான் 

நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஜோடியாக ஜீவா நடித்த படம் இது. விபத்தில் பெற்றோரை இழந்து சிறு வயதிலிருந்தே பாட்டியிடம் வளர்ந்து வரும் மும்பை இளைஞர் ஜீவா, எம்பிஏ படித்து வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். மும்பையில் ஒரு தமிழச்சியைக் கண்டுபிடித்து காதலித்து திருமணம் செய்வதே அவர் லட்சியம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் துளசியைச் சந்தித்து காதலிக்க, அவரும் காதலிக்க, அவரின் தந்தை மறுக்க, அவரை சமாளித்து வெளி வருவதற்குள், துளசியின் முறைப் பையன் வில்லனாக வர அவனை மீறி எப்படி ஜீவா துளசியைக் கைப்பிடிக்க போகிறார் என்பதே கதை. இதில் புதிய விசயம் என்னவென்றால் ??? போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெளிநாட்டில் மாட்டிக்கொள்ளும் கதாநாயகனும், அவனை மீட்க செல்லும் நாயகியும்தான். 

இயக்கம்    ரவி கே சந்திரன்
எழுத்து    ரவி கே சந்திரன்
தயாரிப்பு    எல்ரெட் குமார், ஜெயராமன்
நடிப்பு  ஜீவா, துளசி, நாசர் 
ஒளிப்பதிவு    மனுஷ் நந்தன்
எடிட்    ஸ்ரீகர் பிரசாத்
இசை    ஹாரீஸ் ஜெயராஜ்
தயாரிப்பு நிறுவனம்     ஆர் எஸ் இன்ஃபோடெய்ண்மெண்ட்
வெளியீடு    டிரீம் பாஃக்டரி
தேதி     2 அக்டோபர் 2014
பட நேரம்    156 நிமிடங்கள்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image

கவலை வேண்டாம்

 

2016ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனாலும் படம் சரியாக போகவில்லை. பலரும் ஓடிடி, பைரஸி பிரின்ட்களில் படத்தைப் பார்த்து ரசித்தனர். ஆனால் திரையரங்கில் யாரும் கண்டுகளிக்கவில்லை. 

ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். 

சிறு வயதிலிருந்தே ஒன்றாக பழகி வரும் இரு நண்பர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் மணமுடித்த ஒரே வாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட, ஈகோவால் கணவன் ஜீவாவைப் பிரிகிறார் மனைவி காஜல் அகர்வால். விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்ப, விவாகரத்து வேண்டும் என்றால் ஒரு வாரம் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கவேண்டும் என ஜீவா கண்டிசன் போட, அதற்கும் சம்மதித்து வருகிறார் காஜல் அகர்வால். இதன்பிறகுதான் அதிரடியான கதை வருகிறது. ஆனால் கொஞ்சம் 18+

இயக்கம்    தீக்கே
எழுத்து    தீக்கே
தயாரிப்பு    எல்ரெட் குமார்
நடிப்பு  ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா
ஒளிப்பதிவு    அபி நந்தன் ராமானுஜம்
எடிட்    டி எஸ் சுரேஷ் 
இசை    லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பு நிறுவனம்     ஆர் எஸ் இன்ஃபோடெய்ண்மெண்ட்
வெளியீடு    அபி அண்ட் அபி பிக்சர்ஸ்
தேதி     24 நவம்பர் 2016
பட நேரம்    138 நிமிடங்கள்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்
 

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image

கீ

 

டெக்னாலஜி த்ரில்லர் திரைப்படமாக வெளியான கீ படம், ரசிகர்களுக்கு பிடித்த ஜானராக இருந்திருக்க வேண்டியது. ஆனால் படத்தை எடுத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்தவரையில் நிச்சயமாக நன்றாக வந்திருக்கவேண்டிய படம் இது என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். 

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைக்கா சோடி, கோவிந்த் பத்மசூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தோல்வியைத் தழுவியதால் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்ய முடியாமல் ஜீவா தவித்து வருகிறார். 

இயக்கம்    காளீஸ்
எழுத்து    காளீஸ்
தயாரிப்பு    மைக்கேல் ராயப்பன்
நடிப்பு  ஜீவா, நிக்கி கல்ராணி, அனைக்கா சோடி, கோவிந்த் பத்மசூர்யா
ஒளிப்பதிவு  அபி நந்தன் ராமானுஜம்
எடிட்    நாகூரான் ராமச்சந்திரன்
இசை    விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு நிறுவனம்     குளோபல் இன்ஃபோடெய்ண்மெண்ட்
தேதி     10  மே 2019
பட நேரம்    132 நிமிடங்கள்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்
 

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image

வரலாறு முக்கியம் 

 

பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டும், போட்டிகளின்றி வெளியாகியும் படம் சொதப்பியதால் அவர்களே வெற்றி சந்திப்பு நடத்தி, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். என்ன இது ஜீவாக்கு வந்த நிலைமை என பலரும் வருத்தப்பட வேண்டியதாகிவிட்டது. வரலாறு முக்கியம் படமும் ஜீவாவின் காதல் படங்களில் ஒன்றாக வந்திருக்கும் என நினைத்து பார்த்தால் படம் சொதப்பல் சொதப்பல் சொதப்பலோ சொதப்பல். நாலு டயலாக் பேசிவிட்டால் படம் ஹிட் ஆகிவிடுமா என விமர்சகர்கள் கிழித்து தொங்கவிட்டுவிட்டனர். 

இயக்கம்    சந்தோஷ் ராஜன்
எழுத்து    சந்தோஷ் ராஜன்
தயாரிப்பு    ஆர் பி சவுத்ரி
நடிப்பு  ஜீவா, காஷ்மீரா பரதேசி
ஒளிப்பதிவு சக்தி சரவணன்
எடிட்    என் பி ஸ்ரீகாந்த்
இசை    ஷான் ரஹ்மான்
தயாரிப்பு நிறுவனம்     சூப்பர் குட் பில்ம்ஸ்
தேதி     9 டிசம்பர் 2022
பட நேரம்    138 நிமிடங்கள்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்
 

சுந்தர்.சி கூட காப்பாற்ற முடியாமல் மார்க்கெட்டை இழந்த ஜீவா! இந்த ஐந்து படங்கள்தான் முக்கிய காரணம்! | actor Jeeva failed moviesRepresentative Image

காபி வித் காதல்

 

சுந்தர்.சி யின் காமெடி சரவெடி திரைப்படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட படம் இது. நிச்சயமாக வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால் சூர மொக்கை. படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் கழுவி ஊற்ற, விமர்சகர்கள் சிலரோ இந்த படத்தை விமர்சனம் பண்ணவே தகுதி இல்லை என விட்டுவிட்டனர். சுந்தர்.சி தனது வரலாற்றிலேயே மிக மொக்கையான படம் அரண்மனை சீரிஸ் தான் என நினைத்தவர்களுக்கெல்லாம், இல்லை இல்லை அதை ஓவர்டேக் பண்ண ஒரு படம் எடுக்கிறேன் என இந்த படத்தைக் கொடுத்துள்ளார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்கள். மூன்றும் மூன்று விதமான காதல்.  திருமணம் தாண்டிய காதல் ஒன்று, திருமணம் செய்யாமலே வாழும் காதல் இன்னொன்று, புரிந்துகொள்ளாத புரிந்து கொள்ளவே முடியாத காதல் மற்றொன்று இப்படி மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கும்போது வரும் குழப்பம், அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை. 

ஏற்கனவே திருமணமான ஸ்ரீகாந்த், ரைசாவுடன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறார். ஜெய் - ஐஸ்வர்யா தத்தா லிவ்வின் டுகெதர் வாழ்கிறார்கள். ஆனால் இன்னொருவருடன் சென்றுவிடுகிறார் ஐஸ்வர்யா. ஜெய்யை காதலிக்கிறார் அம்ரிதா, ஆனால் அது தாமதமாக தெரியவே, வருத்தப்படுகிறார். அவருக்கு மாளவிகா சர்மாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது ஆனாலும் அவர் அம்ரிதா பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். மாளவிகா சர்மா, ஜெய்யின் சகோதரர் ஜீவாவைக் காதலிக்கிறார். ஜீவாவுக்கும் ரைசாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. ரைசா ஜீவாவின் அண்ணன் ஸ்ரீகாந்தின் காதலி. இப்படி பல முடிச்சுகளைப் போட்டு அதை அவிழ்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.  

இயக்கம்    சுந்தர் சி
எழுத்து    சுந்தர் சி
தயாரிப்பு    ஆர் பி சவுத்ரி
நடிப்பு  ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, மால்விகா சர்மா, ரெய்சா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா
ஒளிப்பதிவு இ. கிருஷ்ணசாமி
எடிட்    ஃபென்னி ஒலிவர்
இசை    யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம்     அவ்னி சினிமேக்ஸ்
வெளியீடு ரெட் ஜெயண்ட் மூவிஸ்
தேதி     4 நவம்பர் 2022
பட நேரம்    132 நிமிடங்கள்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்