Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,923.11
116.96sensex(0.16%)
நிஃப்டி22,409.65
31.25sensex(0.14%)
USD
81.57
Exclusive

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!

Gowthami Subramani November 10, 2022 & 16:55 [IST]
ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image.

பெண்ணால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சான்றாக, பெண்களை ஊக்குவிக்கும் கதைக்களத்துடன் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருவது எதிர்நீச்சல் சீரியல். இதில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு எவ்வாறு தனது கனவை மாற்றி வாழ்நாள் முழுவதும் புகுந்த வீட்டிற்காக கஷ்டப்படுகிறார்கள் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த சீரியல் தினந்தோறும் எதாவதொரு ட்விஸ்ட் உடன் விறுவிறுப்பாக இருக்கும். சரி, இன்னைக்கு இந்த சீரியல்ல என்ன அப்டேட் இருக்குனு வாங்க பாப்போம்.

சக்தி குந்தவை திருமணம்…! கடைசி நிமிடத்தில் சக்தி செய்த காரியம்? பரபரப்பில் எதிர்நீச்சல்…

தனது வீட்டிற்கு மருமகளாய் வந்த பெண்களை அடைத்து, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தில் மருமகளாய் இருப்பவர் தான் ஜனனி. இந்த எபிசோடு பாக்கும் அனைவருக்கும் ஒரு ஊக்குவிப்பு எண்ணம் எப்போதுமே இருக்கும்.

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image

ஜனனிக்கும், சக்திக்கும் கல்யாணமாகும் போது சக்தி சொன்ன எதையுமே காப்பாத்துல. ஜனனி செய்ற எந்தவொரு விஷயத்துக்கும் கூட இருப்பனு சொன்ன சக்தி, கடைசியில ஜனனியோட கேரக்டர தப்பா சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க. இதுல மெயின் என்னனா..? ஜனனி ஒவ்வொரு விஷயத்துக்கும் அந்த வீட்டுல போராடி வந்தாங்க. இதுல சக்திக்கு வந்த சந்தேகம் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளியா இருந்தது.

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image

இதுல சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வெளிய போன ஜனனி, எப்படியாவது கல்யாண வாழ்க்கைல தோத்துருக்கலாம், கெரியர்ல தோக்கக் கூடாதுனு அவங்கள கெரியர நோக்கி பயணிக்கிற காலம் இது. ஆனா, ஜனனி சக்திய விட்டுட்டு வந்தது ஜனனியோட அப்பாவுக்கும் தெரிஞ்சிடுச்சி. அதுக்கு அப்றம், ஜனனியோட அம்மா எல்லா பிரச்சனையும் சரி பண்ணி, ஜனனியோட கெரியர்க்கு உதவுறாங்க.

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image

இதுக்கு நடுவுல குணசீலன் புதுசு புதுசா பிளேன் போடுறாரு. அவரு போடுற பிளேன் அவங்களோட குடும்பத்துக்கே சரியா தெரிய மாட்டிக்கிது. இதுல எப்படி, ஜனனிக்கு தெரியப் போகுது. இதுக்கு அப்றம் ஜனனி தன்னோட கெரியர நோக்கிப் பயணிக்கலாம்னு கிளம்புற நேரத்துல, ஜனனிய பாக்க அப்பத்தா வராங்க.

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image

இதுவரைக்கும் பேசாமய இருந்த அப்பத்தா, ஜனனிட்ட ஒரு 10 நிமிஷம் பேசணும் எங்கூட வானு சொல்லி கூட்டு போறாங்க. அப்போ ஜனனி தயங்கி யோசிட்டே இருக்கும் போது, ஒரு 10 நிமிஷம் மட்டும் என்னோட வா.. வேற எதுவும் கேக்க மாட்டன்னு ஒரு இடத்துக்கு கூட்டுப் போறாங்க. அந்த இடத்துல ஜனனி ஒரு போட்டோவ காட்டி இது யாருனு தெரியுமானு கேக்றாங்க. அதுக்கு ஜனனி தெரிலனு சொல்ல, அப்பத்தா its me னு ஆங்கிலத்துல அழகா சொல்றாங்க.

ஜனனி மனசை மாற்றிய அப்பத்தா…? மீண்டும் சக்தியுடன் இணைவாரா ஜனனி..!Representative Image

சரி இப்போ எதுக்கு என்ன இங்க கூட்டு வந்தீங்கனு ஜனனி கேக்றாங்க. அதுக்கு, இந்த வீட்ல இது வரைக்கும் என்னென்னமோ நடந்திருக்கு. இந்த நிலைமை மாறாதானு எத்தனை நாள் நானும் காத்திட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் நீ வந்த. உன்னப் பாத்த உடனே, இந்த வீட்டோட நிலைமை மாறிடும்னு நினைச்சேன்னு ஜனனிட்ட சொல்றாங்க. அப்பத்தா திரும்ப ஜனனிய சக்தியோட சேர்த்துடுவாங்களா..? இல்ல ஜனனி என்னோட கெரியர் தான் முக்கியம்னு போகப் போறாங்களானு வெயிட் பண்ணி பாப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்