Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…

Gowthami Subramani November 03, 2022 & 17:35 [IST]
கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக பிக் பாஸ் ரசிகர்களால் பெரிதளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image

பிக்பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து எதாவதொரு டாஸ்க் கொடுத்து செய்ய வைப்பார்கள். இதில் உள்ளவர்களும், நீண்ட நாள் தங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிள் வின்னராக முயற்சி செய்து சொல்லக் கூடிய டாஸ்க்கை செய்வார்கள். அந்த வகையில் ரச்சிதா, விக்ரமன் செய்த டாஸ்க் அனைவரையுமே கண்ணீரில் ஆழ்த்தியது. பிக் பாஸில் அப்படி இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image

கமல் கொடுத்த க்ளூ

நம் வீடு மற்றும் தெருக்கள் தோறும் இருக்கக் கூடிய சாக்கடைகளை க்ளீன் செய்பவர்களின் பிரதிபலிப்பாக, இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா, அமுதவாணன், விக்ரமன் மூன்று பேரும் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு டாஸ்க் வரும் போதும் கமல் ஒரு க்ளூ கொடுத்துட்டுப் போய்டுவாரு. அப்படி, கடந்த வாரத்துல கமல் சொல்லும் போது நமது பக்கத்து மாநிலம் கேரளால மனித கழிவுகளை அள்ள மெஷின் இருக்கு. ஆனா, நம்ம நாட்டுல மனித கழிவுகளை மனிதர்களே தான் அள்ளனும்னு சொன்னாரு. இதுக்கு ஏற்ற மாறியே இப்போ டாஸ்க் அவங்களுக்கு கொடுத்துருக்காங்க.

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image

அம்மாவாக ரச்சிதா

இந்த டாஸ்க பொறுத்த வரைக்கும், கேப்டனாக விக்ரமனும், ரச்சிதா அம்மாவாகவும், மகனாக அமுதவாணனும் நடிச்சிருப்பாங்க. இந்த குட்டி ஃபேமிலில, சாக்கடை அள்ளப் போறவங்களாகவும், ரொம்ப பண நெருக்கடியோட வாழ்ந்துட்டு இருக்காங்க. அமுதவாணனுக்கு பெரிய சைன்டிஸ்ட்-ஆ ஆகணும்னு ஆசை இருக்கும். அது மட்டுமல்லாம், விக்ரமன் தெருவோரத்துல இருக்க சாக்கடை எல்லாம் க்ளீன் செய்ற வேலை பாத்துட்டு இருக்காரு.

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image

விஷவாயு தாக்குதல்

இப்படி ஒரு வீட்டுல அவரு வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, விஷ வாயு தாக்கி ரொம்ப சீரியஸான கண்டிஷனுக்குப் போயிடுறாரு. இதுல அங்க எல்லாம் வேடிக்கை பார்த்து, யாரும் அவருக்கு தண்ணீர்கூட கொடுக்காம இருந்துருக்காங்க. இதுல முக்கியமாக அவங்க மூனு பேரும் மட்டுமல்லாம, அங்க இருந்த மத்தவங்களும் தத்ரூபமா நடிச்சிருந்தாங்க. ரோட்டு ஓரத்துல அவங்கள எப்படிலாம் ரியல் டைம்ல நடத்துவாங்களோ, அதே மாறி அவங்க ட்ரீட் பண்ணி நடிச்சிருந்தாங்க.

கண்ணீரில் மூழ்க வைத்த ரச்சிதா, விக்ரமன்… பிக்பாஸில் செய்த வேலையைப் பாருங்க…Representative Image

என் அப்பாவ காப்பாத்திருக்கலாம்

விக்ரமன் இது வரைக்கும் நடிச்சதே இல்லைனாலும், பிக் பாஸ்ல இந்த டாஸ்க்குக்கு அற்புதமா நடிச்சிருந்தாருனு சொல்றாங்க. இது எல்லாம் முடிஞ்சி அமுதவாணன் சொன்னது எல்லோரையும் ரொம்ப வருத்தத்தில் இருக்க வைத்தது. கேட்டவங்களுக்கு ஒரு வாய் தண்ணீ கூட இந்த சமூகம் தர மாட்டிக்கிது. ஒரு ஐந்து வருஷத்துக்கு முன்னாடி யாராது எங்க அப்பாவுக்கு தண்ணீர் குடுத்துருந்தாலோ, எழுப்பியிருந்தாலோ, எதாவது ட்ரீட்மென்ட் குடுத்துருந்தாலோ என் அப்பா எங்கள காப்பாத்திருப்பாரு. கண்டிப்பா நான் சைன்டிஸ்ட் ஆவன். மனுச கழிவுகளை மனுசனே அள்ளாம இருக்க சூழ்நிலைய நான் கொண்டு வருவேனு சொல்றாரு.

இப்படி தத்ரூபமா நடிச்சி, பிக் பாஸ் அரங்கத்தை மட்டுமல்லாம, பாக்குற எல்லாரோட மனசையும் ஒரு ஆழ்ந்த நினைவாக பதிவாக்கியிருக்காங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்