Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

KANIMOZHI Updated:
மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image.

டிசம்பர் 26ம் தேதி, 2004ம் ஆண்டு அதிகாலை 12:58 மணி அளவில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. 

மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

இதில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோரும் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். இன்று 18ம் ஆண்டு சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை முதல் குமரி வரை கடலோர கிராம மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சுனாமி 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுகாட்டு துறை  ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள், மீனவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் வேதாண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி நகரமன்ற உறுப்பினர்கள், மீனவ பஞ்சாயத்தார் கலந்து கொண்டு செலுத்தினார்.
 
மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

பிச்சாவரத்தில் உள்ள படகு குழாமில் கிள்ளை நகர திமுக செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான கிள்ளை ரவிந்திரன் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடற்கரை பகுதியில் மலர்களை தூவியும், தண்ணீரில் பால் ஊற்றியும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

கடலூரில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடலூர் முதுநகர் சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் கடற்கரை நோக்கி மலர்கள், பால்குடத்துடன் பேரணியாக வந்து, தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினர். 

மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

நாகை அக்கரைப்பேட்டை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் பெண்கள், குழந்தைகள்   என ஆயிரக்கணக்கான மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

கடற்கரையில் சுனாமி பேரிடர் நினைவாக மணல் சிற்பம் அமைக்கப்பட்டு ஏராளமான பெண்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 2004 ஆம் ஆண்டு ஆழி பேரலை சுனாமியால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம். கடற்கரையில் தர்ப்பணம் செய்து மௌன ஊர்வலம். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி. 500க்கும் மேற்பட்ட மீனவர் கிராம மக்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
மறக்குமா நெஞ்சம்.. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Representative Image

சென்னை மெரினாவில் ஏராளமான மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்