Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life Story

Priyanka Hochumin Updated:
தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாள் இன்று [பிப்ரவரி 24]. அவர்களை கௌரவிக்கும் வகையில் அந்த இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சற்று சுருக்கமாக பாப்போம்.

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image

சினிமா நடிகை

1965 ஆம் ஆண்டு இயக்குனர் ஶ்ரீதரினின் 'வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அன்று முதல் எம்.ஜி.ஆர் உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன் 17 திரைப்படங்களும் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்கள் நடித்து தனக்கான தனி முத்திரையை பதித்தார். மேலும் இவர் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம், மணிப்புரி, கதக் உள்ளிட்ட நடனங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர் ஆவர். அப்போது தமிழக மக்களின் உள்ளங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நாடியாக திகழ்ந்தார் செல்வி ஜெயலலிதா.

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image

அரசியல் பயணம்

நடிப்புத் திறனால் மக்களை மகிழ்வித்த எம்.ஜி.ஆர் அவர்கள் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அறிஞர் அண்ணா துறையுடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் சில கருத்து வேறுபாட்டால் தனியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியில் 1984 முதல் 1989 வரை மாநிலங்களவையில் தன்னையும் உறுப்பினராக மாற்றிக்கொண்டார் ஜெயலலிதா.

பின்னர் பல சிரமங்களுக்கு பின்னர் தன்னுடைய திறமைகளை அரசியலிலும் காண்பித்தார் ஜெயலலிதா அம்மா. 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1989ல் அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தமிழக சட்டசபையில் முதல்முறையாக எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image

முதல்வர் பதிவு

இவர் 1991 இல் முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். இவர் தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே அதிக முறை (6 தடவை) முதல்வராக இருந்தவர் ஜெ. ஜெயலலிதா. இவர் முதல்வராக இருந்த சமயத்தில் மதுவிலக்கு, புகையிலை, லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றிற்கு தடை விதித்து மக்களுக்கு நல்லது செய்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தாலிக்கு தங்கம், அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் ஃபேன், அம்மா உணவகம், அம்மா காப்பீடு, அம்மா பார்மஸி, அம்மா லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள், போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்.

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image

பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள்

பெண்களை காவல் துறையில் சேர்வதற்கு ஊக்குவித்தார். மேலும் பெண்களை மையமாகக் கொண்டு தாய்ப்பாலூட்டுவதற்கு தனி அறை, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம், மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவற்றையும் அமைத்தார் ஜெயலலிதா.

தமிழக புரட்சித் தலைவி...முன்னர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா…அம்மாவின் வாழ்க்கை வரலாறு | Jayalalitha Life StoryRepresentative Image

இறப்பு

மக்களுக்கு இவ்ளோ நன்மைகளை செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் டிசம்பர் 5 2016 உயிரிழந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்