Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவி ஸ்ரீமதி உடல் மறு பிரேத பரிசோதனை.....உடலை பெற்றுக்கொள்ள கோரிக்கை...!

madhankumar July 20, 2022 & 08:32 [IST]
மாணவி ஸ்ரீமதி உடல் மறு பிரேத பரிசோதனை.....உடலை பெற்றுக்கொள்ள கோரிக்கை...!Representative Image.

மறு பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது எனவும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்கமாணவி ஸ்ரீமதி மரணம்....வதந்தி பரப்பியதாக மாணவர்கள் இருவர் கைது...!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மனைவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இதையும் படிங்கஇலங்கை அதிபர் தேர்தல்....இன்று நடைபெறும் வாக்கெடுப்பு..!

இதனையடுத்து  வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உ=இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் உடலை மறுபரிசோதனை  செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொன்ற நீதிமன்றம், அரசு சார்பில் மருத்துவர்குழு ஒன்றை நியமனம் செய்தது.

இதையும் படிங்க: காயின்களை இந்த மாதிரி மூவ் பண்ணுங்க..அப்புறம் பாருங்க நீங்கதான் செஸ் வின்னர்...!

மேலும் இந்த பிரேதபரிசோதனையின் போது மாணவியின் தந்தை, அவர்களாவது வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தங்கள் தரப்பு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார் அந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்கபூமியை தாக்கவரும் சோலார் புயல்..! இதனால இவ்வளவு ஆபத்தா..?

இந்நிலையில் அரசு தரப்பில் நீதிமன்றத்தை நாடியவர்களை பிரேதபரிசோதனை செய்ய அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் மாணவியின் பெற்றோரோ வழக்கறிஞரோ யாரும் அங்கு வரவில்லை என கூறினார். அவர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யலாம் பின்னர் அவர்கள் அங்கு வரும் பட்சத்தில் அவர்களையும் அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: ஆடி மாசத்துல ஏன் புதுசா கல்யாணம் ஆன தபதிகள் ஒன்னு சேர கூடாது..?

இதனையடுத்து மனைவியில் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினார், பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வருவார்களா என காத்திருந்தனர். மாலை 3 மணிக்கு மேலும் யாரும் வராததால் மாணவியின் உடலை மறு பிரேதபரிசோதனை நடைபெற்றுள்ளது. பின்னர் மறு பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது எனவும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்