Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital Scan

Gowthami Subramani Updated:
டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து சவுத்தாம்ப்டனில் இருந்து, நியூயார்க்கிற்கு சென்ற டைட்டானிக் கப்பல் ஆனது, நியூயார்க்கிற்குத் தனது முதல் பயணமாக கிளம்பியது. எதிர்பாராத விதமாக, இந்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதியதில் ரூ.1500-க்கும் அதிகமானோர் இறந்தனர். ஆனால், இது குறித்து பல ரகசியங்கள் வெளிவராமால் இருந்தது.

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று விபத்தின் முதல் முழு அளவிலான 3D ஸ்கேன்-ஐ டிஜிட்டல் முறையில் டைட்டானிக் கப்பல் விபத்து குறித்த போட்டோவை வெளியிட்டது. இதில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அட்லாண்டிக் முழுவதும் கடல் லைனர்களின் அதிர்ஷ்ட பயணத்தை பற்றிய சில விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image

அட்லாண்டிக் கடலில் சுமார் 12,500 அடிகள் மூழ்கிய இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1912 ஆம் ஆண்டு சிதைந்த இக்கப்பலின் சிதைவுகளானது 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகே, இந்த டைட்டானிக் விபத்து தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image

1985 ஆம் ஆண்டில் கனடா கடற்கரையில் இருந்து சுமார் 650 கிமீ தொலைவில் கப்பல் விபத்து குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதே சமயம், கப்பலை முழுமையாக கேமராக்கள் படம் பிடிக்க முடியவில்லை. மேலும், இத்திட்டத்தைப் பற்றி ஆவணப்படத்தை உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image

இந்த 3D ஸ்கேன் மூலம் வெளிவந்த புகைப்படங்கள் டைட்டானிக் கப்பலின் அளவை எடுத்துக் காட்டுகிறது. இந்த கப்பல் வடிவமைப்பு, சிறந்த பொறியியல் கட்டமைப்பையும் காட்டுகிறது.

3D ஸ்கேன் ஆய்வு திட்டத்திற்கு தலைமை தாங்கிய மாகெல்லனின் ஜெர்ஹார்ட் சீஃபர்ட் கூறியதாவது, இந்த டைட்டானிக் கப்பல் சிதைவு கண்டறியும் இத்திட்டம் கடலுக்கடியில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கேனிங் திட்டம் என கூறியுள்ளார்.

டைட்டானிக்கின் சொல்லப்படாத ரகசியங்களை விளக்கும் டிஜிட்டல் ஸ்கேன்..! | Titanic Digital ScanRepresentative Image

மேலும், டைட்டானிக்கின் ரகசியமான இந்த ஸ்கேன்கள் கப்பல் விபத்துக்குள்ளான அந்த இரவு நேரத்தில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்த கூடுதல் விவரங்களையும் வெளிப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. நவீன காலத்தில் இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம், இன்னும் புதைந்து போல ரகசியங்கள் வெளிப்படும் என நம்பப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்