Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image.

தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு எந்த ரெசிபி. இந்த ரெசிபி உடலுக்கு மிகவும் சத்துகள் தரக்கூடிய ஒரு உணவுப் பொருள் வைத்துச் செய்கிறோம். இந்த ரெசிபி முழுவதுமாக உடலுக்குச் சத்து நிறைந்த உணவுகளை வைத்து மட்டும் தான் செய்வார்கள். இந்த ரெசிபியை காலையில் உணவுக்குப் பதிலாகச் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ ராகி மாவு – 400 கிராம்

✤ வெங்காயம் – 4

✤ கேரட் – 4

✤ சீரகம் – 2 ஸ்பூன்

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image

✤ பொட்டுக்கடலை – 3 ஸ்பூன்

✤ உப்பு – ஒரு சிட்டிகை

✤ கறிவேப்பிலை – சிறிதளவு

✤ கொத்தமல்லி – சிறிதளவு

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ வெங்காயத்தை எடுத்துத் தோல் நீக்கி, கழுவ வேண்டும். அதற்குப் பின், வெங்காயத்தை எடுத்து நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி எடுத்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அதை நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

✤ கேரட் மேல் தோல் சீவி கழுவிக் கொள்ளவும். அதை நன்றாகப் பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

✤ கருவேப்பிலை எடுத்து நன்றாகக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image

✤ ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 400 கிராம் அளவிற்கு, ராகி மாவு சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

✤ அதில் பொட்டுக்கடலையை அரைத்துக் கூட சேர்க்கலாம் அல்லது அப்படியே கூட சேர்க்கலாம்.

✤ அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை, கேரட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

✤ அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்குச் சீரகம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி ராகி ரொட்டி செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் தண்ணீர் சேர்த்து நன்றாகச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைய வேண்டும்.

✤ பிசைந்த பிறகு ஒரு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதற்குப் பின், ஒரு தோசைக் கல் எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.

✤ அதற்குப் பின், சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடான பின், அதில் ஊற வைத்த மாவை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

✤ அதை வட்டவடிவில் தட்ட வேண்டும். அதைத் தோசைக் கல்லில் போட்டு சிறிதளவு எண்ணெய் சுற்றி வர ஊற்ற வேண்டும். வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சூடான ராகி ரொட்டி தயார். காலையில் ஒரு சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு ரெசிபி தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்