Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?

Vaishnavi Subramani Updated:
இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image.

தினமும் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், இன்றைய ஸ்நாக்ஸ் ரெசிபி என்பது ஒரு சத்து நிறைந்த மற்றும் உடல் எடை குறைவதற்கு ஒரு ஸ்நாக்ஸ். இந்த ரெசிபி பீட்சா மற்றும் பர்கர் இணையான ஒரு ரெசிபி.

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

✤ இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் ஆகத் தான் இருக்கும். இந்த பதிவில் இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ ரவை – 1/4 கப்

✤ வரமிளகாய் – 5

✤ பூண்டு -10 பற்கள்

✤ கோதுமை மாவு – 1 கப்

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

✤ கட்டி பெருங்காயம் – சிறிதளவு

✤ உப்பு – தேவையான அளவு

✤ கருவேப்பிலை – சிறிதளவு

✤ எண்ணெய் – சிறிதளவு

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

செய்முறை

✤ முதலில் பூண்டை எடுத்துத் தோல் உரித்து அதை நன்றாகக் கழுவ வேண்டும். அதற்குப் பின், கருவேப்பிலை எடுத்து நன்றாகக் கழுவி நறுக்க வேண்டும்.

✤ ஒரு மிக்ஸி, ஜாரில் நறுக்கிய கருவேப்பிலை மற்றும் பூண்டு, ஐந்து வரமிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதில் கட்டி பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

✤ அதை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். கால் கப் அளவிற்கு ரவை எடுத்து அதை நன்றாக மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவிற்குக் கோதுமை சேர்க்கவும். அதில் உப்பு சிறிதளவு மற்றும் அரைத்த அந்த மசாலா கலவையைச் சேர்க்கவும்.

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மாவு பிசையத் தேவையான எண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடாக்க வேண்டும். சூடான பின், அந்த எண்ணெய்யை எடுத்து கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆற விடவும்.

✤ அதற்குப் பின், அந்த மாவு கலவையில் அரைத்த ரவையைச் சேர்க்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

✤ அதில் சூடான எண்ணெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். அதை இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.

✤ அதற்குப் பின் அந்த மாவை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். அதைச் சப்பாத்தி கட்டையில் வைத்து நன்றாகச் சப்பாத்தி போல் தேய்க்கவும்.

✤ அதை உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் கத்தி அல்லது கட்டர் வைத்து சிறிய சிறிய துண்டுகளாகக் கட் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் மொறுமொறுப்பான கோதுமை சிப்ஸ் எப்படிச் செய்வது ?Representative Image

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடாக்க வேண்டும். அதில் கட் செய்த துண்டுகளைச் சேர்த்து நன்றாகப் பொரிக்க வேண்டும்.

✤ பொரித்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக்ஸ் உடலுக்கு ஆரோக்கியமாகவும் மற்றும் குழந்தைகளுக்குப் பிடித்த ஓரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்