Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image.

தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு எந்த ரெசிபி. இந்த ரெசிபி உடலுக்கு மிகவும் சத்துகள் தரக்கூடிய ஒரு உணவுப் பொருள் வைத்துச் செய்கிறோம். வாழைப்பூ சாப்பிட்டால் வயிற்று புண்களை சரிசெய்வது மற்றும் பெண்களின் கருப்பை வலுப்பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ இந்த ரெசிபி முழுவதுமாக உடலுக்குச் சத்து நிறைந்த உணவுகளை வைத்து மட்டும் தான் செய்வார்கள். இந்த ரெசிபியை காலையில் உணவுக்குப் பதிலாகச் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் காலையில் ஒரு சுவையான வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ வாழைப்பூ – 1

✤ கோதுமை மாவு – 1/2 கப்

✤ பாசிப்பருப்பு – 8 ஸ்பூன்

✤ சின்ன வெங்காயம் – 10

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ பச்சை மிளகாய் – 3

✤ பூண்டு – 4 பற்கள்

✤ சீரகம் – 4 சிட்டிகை

✤ உப்பு – சிறிதளவு

✤ எண்ணெய் – சிறிதளவு

✤ தயிர் – 4 ஸ்பூன்

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் வாழைப்பூ எடுத்து அதில் உள்ள விழுதுகளைப் பிரித்துக் கொள்ளவும். அதில் உள்ள நார்களை எடுத்து விட்டு, பொடிப் பொடியாக நறுக்கி அதை இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

✤ சின்ன வெங்காயம் எடுத்துத் தோல் உரிக்கவும். அதைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

✤ பச்சைமிளகாய் எடுத்துக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ பூண்டு எடுத்துத் தோல் உரித்துக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் சேர்த்து அத்துடன் எட்டு ஸ்பூன் அளவிற்குப் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.

✤ அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் நறுக்கிய வாழைப்பூ மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

✤ வதக்கிய பிறகு, அடுப்பிலிருந்து கீழ் இறக்கி வைக்கவும். அது குளிர்ந்த பிறகு, அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

✤ அதற்குப் பின், மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் அரைக் கப் அளவிற்குக் கோதுமை மாவு மற்றும் நான்கு ஸ்பூன் அளவிற்குத் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதில் அரைத்த கலவையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

✤ அடுப்பில் தோசைக் கல் வைத்து அது சூடான பின், அதில் பிசைந்த மாவை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி ?Representative Image

✤ அதை வட்டவடிவில் தட்டி அல்லது சப்பாத்தி கட்டையில் வைத்துத் தேய்த்து எடுத்து சூடான கல்லில் போட்டு அதைச் சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும்.

✤ அது நன்றாக வேக வைத்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான வாழைப்பூ சப்பாத்தி தயார். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். இது காலை உணவாக சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலின் எடை குறைப்பதற்கு உதவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்