Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?

Vaishnavi Subramani Updated:
இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image.

தினமும் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், இன்றைய ஸ்நாக்ஸ் ரெசிபி என்பது ஒரு சத்து நிறைந்த மற்றும் உத்வேகம் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி ஒரு சூப் என்றாலும் அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் ஆகத் தான் இருக்கும். இந்த பதிவில் இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ கேரட் – 2

✤ சோயா பீன்ஸ் – 1/2கப்

✤ இனிப்பான சோளம் – 1

✤ பட்டாணி – 1/2கப்

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

✤ வெங்காயம் -2

✤ கொத்தமல்லி – சிறிதளவு

✤ எண்ணெய் – 2டிஸ்பூன்

✤ மிளகு தூள் – 2 டிஸ்பூன்

✤ உப்பு – சிறிதளவு

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

செய்முறை

✤ முதலில் வெங்காயம் எடுத்துத் தோல் உரித்துக் கழுவ வேண்டும். அதற்குப்பின், அதைப் பொடியாக நறுக்க வேண்டும்.

✤ கேரட் எடுத்து மேல் தோல் சீவி நன்றாகக் கழுவ வேண்டும். பொடியாக நறுக்க வேண்டும். கொத்தமல்லி தலையை நன்றாகக் கழுவ வேண்டும்.

✤ அதை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். சோளத்தை எடுத்து உதிரி உதிரியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

✤ வெந்த பிறகு, அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சோளத்தை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ மீதமுள்ள சோளத்தை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

✤ அதை எடுத்து சிறிதளவு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

✤ அது நன்றாகச் சூடான பின், அதில் நறுக்கிய வெங்காயத்தை முழுவதுமாக சேர்க்காமல் சிறிதளவு தனியாக எடுத்துக் கொள்ளவும்.

✤ மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் நறுக்கிய கேரட் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள கேரட் சேர்த்துக் கொள்ளவும்.

✤ அத்துடன் சோயா பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்த சோளம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான கார்ன் சூப் எப்படிச் செய்வது ?Representative Image

✤ தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாகக் காய் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதற்குப் பின், இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்த சோளத்தைச் சேர்த்து நன்றாக வேக விடவேண்டும்.

✤ அது கொதித்து வந்த உடன் அதில் இரண்டு டிஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

✤ அது கொதித்து வந்த உடன் அடுப்பை அணைத்து இறக்கினால் சூப் தயார். அதில் தனியாக எடுத்து வைத்த கொத்தமல்லி மற்றும் வெங்காயம், கேரட் சேர்த்து அலங்கரித்தால் சூடான மற்றும் சுவையான இனிப்பான சோளம் சூப் தயார்.

✤ கடைகளில் விற்கும் ஸ்வீட் கார்ன் சூப்பைப் போல் இந்த சூப் இருக்கும். இது சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாகவும், உத்வேகமாகவும் இருக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்