Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 23:00 [IST]
உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image.

உடலுறவு என்பது இல்லற வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம். இது மனதளவிலும் உடலளவிலும் இருக்கும் அழுத்தங்களை உடைத்து உச்சக்கட்ட இன்பத்தை தரக்கூடியது. அதுவும் பாதுகாப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், சிலரோ உடலுறவு சமயத்தில் சில அசௌகரியங்களை சந்திக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள்.

ஏனென்றால், சில பெண்கள் உடலுறவுக்கு பின் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, மற்றும் வலி போன்ற விஷயங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால், பலருக்கும் இது எதனால் ஏற்படுகிறது என்ற காரணம் தெரிவது இல்லை. இது சாதாரண விஷயமாக இருந்தாலும் சில நேரங்களில் அது வேறொரு பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, ஒவ்வொரு பெண்களும் உடலுறவுக்கு பின் அனுபவிக்கும் இம்மாதிரியான விஷயங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image

நீங்கள் உடலுறவுக்கு பின்பு அதிக வலி மற்றும் எரிச்சலை அனுபவிக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் தொற்றாக கூட இருக்கலாம். இது ஈஸ்ட் கிருமிகளால் உண்டாகும் ஒருவிதமான பாலியல் தொற்று. இது அந்தசமயத்தில் வெளியாகும் வெள்ளைநிற திரவத்தின் மூலம் அரிப்பை உண்டாக்கி, எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும். 

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image

பாலியல் தொற்றால் நீங்கள் பாதிக்கப்படவில்லை, இருந்தாலும் பிறப்புறுப்பில் அரிப்பு, வலி, எரிச்சல் ஏற்பட்டால் அதற்கு காரணம் சிறுநீரக தொற்றாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அடி முதுகு வலி, திடீரென அவசரமாக சிறுநீர் வருதல், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம், எப்போதும் அடிவயிற்றில் சிறுநீர் முட்டிக்கொண்டு இருப்பதுபோல் தோன்றுவது, பசியின்மை போன்ற அறிகுறிகளை அனுபவிப்பீர்கள். 

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image

சில சமயங்களில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் ஆணுறை கூட பல பெண்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல், உடலுறவின் போது வழவழப்பு தன்மைக்காக பயன்படுத்தப்படும் சில தயாரிப்புகள் காரணமாவும் பலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். எனவே, தாமதம் காட்டாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image

ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றாலும் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும். அதாவது, பிசிஓடி, கர்ப்பம், பிசிஓஎஸ், மெனோபாஸ் அடையும் வயது, மனஅழுத்தம் இவற்றில்  ஏதேனும் இருந்தாலும் ஹார்மோன் சமநிலையில் இருக்காது. இதனாலும், அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். இதற்கு நீங்கள் lubricant பயன்படுத்துவது நல்லது. 

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  Representative Image

உடலுறவுக்கு பின் மேலே கூறிய எதுவும் காரணம் இல்லையென்றால், வேறு ஏதாவது உடல் சம்பந்தமான பிரச்சனையாக இருக்கலாம். அதாவது உதிரப்போக்கு, இடுப்பு வலி போன்று உங்க உடலில் ஏற்படும் மற்ற அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடித்துவிடலாம். எனவே, இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வதால் மோசமான பின்விளைவுகளை தவிர்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்