Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அரிய வகை நோய்..

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 16:00 [IST]
சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அரிய வகை நோய்.. Representative Image.

What is Vestibular Hypofunction in Tamil: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பதிவில் தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதனை அவருடைய ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் பிரபலங்கள் பலரும், விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், சமந்தாவை போன்றே பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கும் அரிய வகை நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. Vestibular Hypofunction எனும் அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக வருண் தவான் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். வருண் தவானின் ட்வீட்டுகளை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..

சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அரிய வகை நோய்.. Representative Image

வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன் என்றால் என்ன?

நம்முடைய உள் காதுக்கும் நம் கண்கள் மற்றும் மூளைக்கும் இடையே உள்ள இணைப்பை தான் 'வெஸ்டிபுலர் அமைப்பு' என்பார்கள். இந்த அமைப்பு தான் நாம் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது அல்லது தரையில் நடக்கும்போது சமநிலையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த அமைப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உள் காதின் சமநிலை பகுதி சரியாக வேலை செய்யாது. 

வயதாகிவிடுமோ என்று பயப்படுறீங்களா? இதுவும் ஒரு நோயே!

இதை தான் 'வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன்' (Vestibular Hypofunction) என்றழைக்கப்படுகிறது. அந்தசமயத்தில் தலைச்சுற்றல், செவிப்புலன் மற்றும் பார்வையில் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்தும். வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன் என்பது ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோயானது பல காரணங்களால் ஏற்படுகிறது. மேலும், இது தலையின் ஒரு பகுதியில் அல்லது இருபுறத்திலும் கூட ஏற்படும். 

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..

சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அரிய வகை நோய்.. Representative Image

வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன் அறிகுறிகள்:

  • நாள்பட்ட தலைச்சுற்றல்
  • குமட்டல்
  • வயிற்றுப்போக்கு
  • பயம்
  • பதட்டம்
  • இதய துடிப்பில் மாற்றம்
  • படிப்பதில் சிரமம்
  • வாகனம் ஓட்டுவதில் சிரமம்
  • இருட்டில் நடப்பதில் தடுமாற்றம்

ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் நோயின் அறிகுறிகளும் தடுப்பு நடவடிக்கைகளும்...

சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகருக்கும் அரிய வகை நோய்.. Representative Image

சிகிச்சை:

சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வதால் உடல் சமநிலையை மேம்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தகுந்த நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுக்காவிட்டால் பல மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மேற்கண்ட அறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

அல்சைமர் ஆபத்தானதா? இந்த நோயை எவ்வாறு சரிசெய்யலாம்?

வெஸ்டிபுலர் செயல்பாட்டை மேம்படுத்துவது எப்படி?

நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், உங்கள் தலையை கீழே குனிந்து தரையை பார்க்கவும், பின்னர் மேலே பார்க்கவும். 

உங்கள் கண்களை தரையிலும் விட்டத்திலும் கவனம் செலுத்தி உங்க தலையை வழிநடத்துங்கள்.

இதை தினமும் 10 முறை செய்யவும். இதனால் உங்கள் வெஸ்டிபுலர் செயல்பாடு மேம்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்