Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Layoffs in India: ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க இதுதான் காரணமா...? அதிர்ச்சி தகவல்...

Nandhinipriya Ganeshan May 30, 2022 & 11:30 [IST]
Layoffs in India: ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க இதுதான் காரணமா...? அதிர்ச்சி தகவல்...Representative Image.

Layoffs in India: சமீபத்தில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அறிந்ததே. இந்த ஆண்டு ஒட்டுமொத்த நிதியுதவியும் அதிகமாக தான் இருக்கிறது, ஆனால் நிறுவனங்கள் ஏன் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன என்ற கேள்விக்கு பதில் தெரியாமலே இருந்தது. தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. 

பணிநீக்கம் எதற்கு?

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செலவுக் குறைப்பை முதன்மைக் காரணமாக கூறி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தாலும், இந்த ஆண்டு ஜனவர்-ஏப்ரல் மாதங்களில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த நிதியுதவி கடந்த ஆண்டைவிட அதிகமாக தான் இருப்பதாகவும், 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகமாக தான் இருப்பதாகவும் தரவுகள் காட்டுகிறது. அப்படி இருந்தாலும், தற்போதைய நிலையற்ற சந்தை நிலைமைகள் காரணமாக பெரிய டிக்கெட் நிதிகள் (big-ticket fundings) இப்போது குறைந்துள்ளதாம். இதனால், லாபத்தை அதிகரிப்பதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தை சேமிக்க ஊழியர்களை பணிநீக்கம் (startup layoffs india) செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

2022 முதல் ஐந்து மாதங்களின் நிதி மதிப்பு:

இந்த ஆண்டு ஜனவரி-ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மட்டும் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வளர்ச்சி மற்றும் ஆரம்ப கட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே மாதங்களில் 11.2 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டதாக வென்ச்சர் இண்டலிஜென்ஸ் (Venture Intelligence) மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மெலும், வென்ச்சர் இண்டலிஜென்ஸ் தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டு சுமார் 33 நிறுவனங்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கும் அதிகமான நிதியுதவியை திரட்டியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இந்த முதல் ஐந்து மாதங்களில் இந்த எண்ணிக்கை 29 ஆக மட்டுமே இருந்தது. 

சீர்குலைந்த ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம்:

சமீபத்தில் தொடரும் அதிகபட்ச பணிநீக்கத்தல் ஆயிரக்காணக்கானோர் வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இந்த திடீர் பணிநீக்கம் அவர்களின் வாழ்க்கையை சீர்க்குலைத்துள்ளது. இதுவரை, கார்ஸ்24, ஓலா, மீஷோ, ட்ரெல், அனாகாடமி மற்றும் வேதாந்து போன்ற யூனிகார்ன்களை உள்ளடக்கிய 13 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 8,364 ஊழியர்கள் பணிநீக்கம் (startup layoffs 2022) செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்கம் மேலும் தொடரும் என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்தி கள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்