Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Navratri 1st Day : எந்த நட்சத்திரக்காரர்கள் நவராத்திரி முதல் நாள் பூஜை செய்ய வேண்டும்?

Manoj Krishnamoorthi September 19, 2022 & 16:45 [IST]
Navratri 1st Day : எந்த நட்சத்திரக்காரர்கள் நவராத்திரி முதல் நாள் பூஜை செய்ய வேண்டும்?Representative Image.

சர்வேஸ்வரனின் பாதியான உமா மகேஸ்வரி தேவி, திருமாலின் இதயத்தில் குடிகொண்ட லட்சுமி தேவி, கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளின் சொரூபத்துக்கு உரிய ஒன்பது நாட்கள் நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாளும் ஒன்பது விதமாக பிரசாதம் அமைத்து பூஜிக்கலாம்.  

நவராத்திரி முதல் நாள் ( First Day Of Navratri Puja)

நம் வீட்டில் அம்மாளை குழந்தையாகப் பாவித்து  பூஜிக்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்வது மாலையில் செய்தல் சால சிறந்தது. வீட்டின் வாசலில் அரிசிமாவில் கோலமிட்டு அலங்கரித்து கொள்ள வேண்டும். நவராத்திரி முதல் நாள் வழிபட வேண்டிய இறைவி சாமுண்டி தேவி ஆகும். சாமுண்டி தேவிக்கு மல்லிகை, வில்வம் மலர் சூட்டி அலங்கரித்து கொள்ளவும். இன்றைய தினம் இசை வாசிப்பது அம்பிக்கைக்கு பிடித்தது ஆகும், மிருதங்கத்தைத் தோடி ராகத்தில் வாசித்து பூஜை செய்தல் உசீதம் ஆகும். முழுமுதற் கடவுள் விநாயகர் பூஜையை தொடங்கி அம்மாளுக்கு தீபாராதனை செய்யலாம்.

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? 

மந்திரம் (Navarathri First Day Mantra

ஓம் ஹ்ரீம சாமுண்டி ஆசனாயயாய நம

ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே 

சூல ஹஸ்தாயை தீமஹி 

தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்...

வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் ( Navratri Pooja Tamil)  

மிருகஸீரிஷம், சித்திரை, அவிட்டம்

பிரசாதம் (First Day Of Navratri Prasadam

அம்பிகைக்கு வெண்பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல்  நைவேத்தியம் வைத்து அம்மாளுக்கு பூஜித்து நம் வீட்டில் அமைத்திருக்கும் கொலுவைப் பார்க்க வருகை தரும் பக்தர்களுக்கு அளிக்க வேண்டும். 

நவராத்திரி முதல் நாள்- 9வது நள் வரை என்ன செய்ய வேண்டும்,

யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம் 

1st நாள்  4th நாள் 7th நாள்
2nd நாள் 5th நாள் 8th நாள்
3rd நாள் 6th நாள் 9th நாள்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்