Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…

Gowthami Subramani October 17, 2022 & 18:15 [IST]
குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைத் தொகை இன்று அதாவது அக்டோபர் 17 ஆம் நாள் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதன் படி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், 12 கோடி விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 12 ஆவது தவணைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image

பிஎம் கிசான் திட்டம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு ஆண்டுக்கு 6000 ரூ தவணை முறையில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்குகிறது. அதன் படி, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணைகளாக ரூ.2000 பெறுவர். இது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image

கட்டாயம் செய்ய வேண்டியது

11 ஆவது தவணைத் தொகை பெற்ற பிறகு, பிஎம் கிசான் திட்டத்தில் உள்ள விவசாயிகள் கட்டாயம் அவர்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டது. இவ்வாறு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் மட்டுமே மத்திய அரசு கொடுக்கப்படும் 12 ஆவது தவணைத் தொகையைப் பெற முடியும் என கூறப்பட்டிருந்தது. எனவே, விவசாயிகள் கட்டாயம், உங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, பிரமரின் கிஷான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்காக மத்திய அரசு வழங்கும் 12 ஆவது தவணைத் தொகை அக்டோபர் 17, 18 ஆம் தேதிகள் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அவ்வாறே, இன்று மத்திய அரசு 12 ஆவது தவணைத் தொகையை வெளியிட்டுள்ளது.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image

ஆதார் கட்டாயம் தேவை

இவ்வாறு அனுப்பப்பட்ட தொகை, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும். அதன் படி, வங்கிக் கனக்கில் ஆதார் எண்ணை சமர்ப்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் ரூ.2000-ஐப் பெறலாம்.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…Representative Image

தவணைத் தொகையை எப்படி சரிபார்ப்பது?

விவசாயிகள் கட்டாயம் ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்திருக்க வேண்டும்.

பிஎம் கிசானின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், Farmers Corner என்பதில், Beneficiary Status என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.

இந்தப் பக்கத்தில், ஆதார் எண், மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும்.

பின்னர், உங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெற முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்