Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி] நாளுக்கான  துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - உத்வேகம்

விருச்சிகம் - எச்சரிக்கை

தனுசு - கோபம்

மகரம் - பிரச்சனை

கும்பம் - அனுகூலம்

மீனம் - உதவி

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 01.45 - 02.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [18.12.2022]

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். உத்வேகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7 

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். சிலர் வேண்டுமென்றே உங்களிடம் சண்டைக்கு வருவார்கள், வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்த்த ஒப்பந்தம் சிலருக்கு சாதகமாக அமையும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. எச்சரிக்கை! 

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். குடும்பத்தில் நெருக்கடியான சூழல் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும். பெரியோர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு. யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். துணையிடம் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனவரவு சுமாராக தான் இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரச்சனை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.. 18.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமாக தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்