Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்: இத்தன நாள் பட்ட அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் விடை கிடைக்கும் நாள் வந்தாச்சு..

Nandhinipriya Ganeshan Updated:
தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்: இத்தன நாள் பட்ட அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் விடை கிடைக்கும் நாள் வந்தாச்சு..Representative Image.

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே! கடந்த ஏழரை ஆண்டுகளாக போட்டு பாடாய் படுத்திய ஏழரை சனி உங்க ராசியை விட்டு விலகுவதால், 2023 புத்தாண்டு முழுவதும் அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும், குரு பகவானும் உங்க ராசியை பார்க்கப்போகிறார். இனி எல்லாமே ஜெயம் தான்.

இனி நீங்கதான் ராஜா

சனி பகவான் உங்களை விட்டு விலகுவதால் நன்மைகளை அள்ளிக் கொடுத்துவிட்டு செல்கிறார். அதனால், வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை தேடக்கூடியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பட்ட அவமானங்கள் நீங்கி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறுதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அடுத்தடுத்த மகிழ்ச்சியான சம்பவங்கள் உங்க வாழ்க்கையில் நிகழப்போகிறது.

குருபகவானின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுவதால்,  மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அற்புத செய்திகள் தேடி வரும். கூலித் தொழில் செய்பவர்களுக்கு கூட தொடர்ந்து வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
  
கடன் தொல்லை நீங்கும்

சரியான வேலை அமையாததால் கடனை வாங்கி குவித்திருப்பீர்கள். இது உங்களை ரொம்ப நாட்களாக போட்டு வாட்டி வதைத்திருக்கும். 2023 ஆம் ஆண்டில் நிலவும் கிரக நிலை மேன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பதால், கடன் தொல்லையிலிருந்து மீளப்போகிறீர்கள். வாய்ப்பிழந்த இருந்த தொழில் கூட மீட்டெடுக்கக்கூடிய ஆண்டாகவும் இருக்கும். வியாபாரம் சிறக்கும். இதுவரை உங்களை போட்டு வாட்டி வதைத்த ஆரோக்கிய குறைபாடு, உடல் நலனில் ஏற்பட்ட தொடர் தொல்லைகள் நீங்க ஆரோக்கியம் மேம்படும். 

குடும்பத்தில் ஒற்றுமை

இந்த ஆண்டு பிரிந்து போன உறவினர்கள் வந்து சேருவார்கள். உங்க துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் கூட நீங்கும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்களும் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய ஆண்டு. சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான அனைத்து முயற்சியும் வெற்றி தரக்கூடிய ஆண்டாகவும் உள்ளது. திருமணத்திருக்கு காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல செய்தி வரும்.

பரிகாரம்:

அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அடிக்கடி சென்று வழிபாடு செய்யுங்கள். நவகிரக வழிபாடும் உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். குரு பார்வை உங்க ராசி மீது விழுவதால், வியாழக்கிழமைகளில் குரு பகவானை குரு ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்