Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த இரண்டரை வருஷத்திற்கு அர்த்தாஷ்டம சனி.. ரொம்ப கவனமாக இருக்கனும் விருச்சிக ராசியினரே..

Nandhinipriya Ganeshan Updated:
விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த இரண்டரை வருஷத்திற்கு அர்த்தாஷ்டம சனி.. ரொம்ப கவனமாக இருக்கனும் விருச்சிக ராசியினரே..Representative Image.

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ஆம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து ஓரளவு நற்பலன்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது 4ஆம் வீடான சுக, கிருகம், மாத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார். அதாவது அர்த்தாஷ்டம இடத்திற்கு செல்கிறது. இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடக்க உள்ளது. எனவே, இந்த ஆண்டு முழுவதும் யாரிடமும் கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேலை வாங்கிவிட்டால், அதை இரண்டரை வருஷத்திற்கு திருப்பி செலுத்த முடியாது. இழுபறியாகவே இருக்கும். முடிந்தவரை கடனை தவிர்த்துவிடுங்கள். 

அர்த்தாஷ்டம சனி

இந்த காலக் கட்டத்தில் நீங்கள் இருக்கும் வீடு மாற்றம் நடக்கும். அல்லது வேலை, தொழிலில் மாற்றம் நடக்கும். அதன்படி, நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் பொறுப்புகள் மாற்றம் ஏற்படும். அல்லது இப்போது வேலை செய்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தையே மாற்றக்கூடிய சூழலும் ஏற்படலாம். எனவே, அதற்கேற்ப திட்டமிடல் தேவை. அதேபோல், விருச்சிக ராசிக்காரர் சிலர் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடியேறவும் செய்வீர்கள். மேலும், சிலருக்கு இருக்கும் சொந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு இடத்தில் புதிய வீடு வாங்கி குடியேறவும் வாய்ப்புண்டு. 

குரு பகவான் 

குரு பகவானின் பார்வை மே மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மதிப்பு மரியாதை உயரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறும் கிடைக்கும். அதேபோல், மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி தேடி வரும். குருவின் அமைப்பால் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முதல் பாதியில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஏப்ரலுக்குப் பின் குரு பெயர்ச்சி நடந்த பின்னர் சற்று மந்தமாக இருக்கும்.

மாணவர்களுக்கு

விருச்சிக ராசி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் உயர்கல்வி படிக்க யோகம் உண்டு. அதேபோல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அனுகூலப் பலன்களை பெற்று தரும். சூரியனும், செவ்வாயும் ஆண்டு முழுவதும் சாதகமாகவே இருக்கும். செப்டம்பர் வரை வெளிநாடு வேலைக்கு முயல்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.  

தொழில் சிறக்குமா?

உங்க ராசிக்கு குரு, சனியின் பார்வை இருப்பதால் தொழிலில் அதிகளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். இல்லையென்றால், நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். அதேபோல், பெரிய முதலீடு, புதிய தொழிலில் இறங்குவதாக இருந்தால் முதலில் உங்க ஜனன கால ஜாதகத்தை ஆராய்வது சிறந்தது. 

ஆரோக்கியத்தில் அதிக கவனம்

அர்த்தாஷ்டம சனி என்பதால் உங்க அம்மாவின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். உடல்நலத்தை தாண்டி, மனதில் கவலை உண்டாகவும் அதிகளவில் வாய்ப்புள்ளது. இவ்வளவு பிரச்சனை இருப்பினும் உங்க ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஏப்ரல் மாதம் வரை சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய மனஉறுதியை வளர்த்துக்கொள்வீர்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வது போல.. நீங்க நல்லதை நினைப்பதாலும், நல்லதை பேசுவதாலும் நல்லதே நடக்கும். யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன நாம் சரியாக இருந்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது. மேலும் அனுகூலப் பலன்களை அனுபவிக்க இந்த வருடம் முழுவதும் மெருன், வெளிர் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கான ராசி எண்கள் 1, 3, 9 ஆகும். 

பரிகாரம்:

குல தெய்வ வழிபாடு செய்வதும், நரசிம்மர் வழிபாடு செய்து வர சிறப்பான பலன்களை அடைந்திட முடியும். அதேபோல், அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்த்துவிட்டு முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள். ஜனவரி 2023 க்கு பிறகு அருகில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு அல்லது நவகிரக கோவில் சென்று வர முயற்சி செய்யுங்கள். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அனுகூலப் பலன்களை பெறலாம். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்