Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,895.62
247.00sensex(0.34%)
நிஃப்டி22,410.75
74.35sensex(0.33%)
USD
81.57
Exclusive

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்: ஒருபக்கம் நல்லது நடந்தாலும், மறுபக்கம் சிக்கலாக தான் இருக்கும்..

Nandhinipriya Ganeshan Updated:
கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்: ஒருபக்கம் நல்லது நடந்தாலும், மறுபக்கம் சிக்கலாக தான் இருக்கும்..Representative Image.

ஏழரை சனி ஆரம்பித்த நாளில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனைதான். இதன் மூலம் எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்ட உங்களுக்கு இந்த 2023 புத்தாண்டு நிறைய அனுகூலப் பலன்களை தரப்போகிறது. இருப்பினும், விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் வருட ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கப்போகிறது. அதாவது, உங்க ராசி அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதனால், எதையும் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டுவது நல்லது. 

ராசிக்குள் நுழையும் சனி பகவான் இந்த வருடத்தில் உங்களை பற்றியும், உங்களை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் உங்களுக்கு புரிய வைப்பார். இதன் மூலம் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார். சனி பகவான் நிறைய சோதனைகளை கொடுத்தாலும் கடைசியில் நன்மைகளை அள்ளிக்கொடுக்க கூடியவர். எனவே, மனம்தளராமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 

மிகுந்த கவனம் தேவை

இந்த காலத்தில் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அதேபோல், உறவினர்களிடமும் சக பணியாளர்களிடமும் பேசும் வார்த்தையில் கவனமாக பேச வேண்டும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி மாட்டிக் கொள்ளாதீர்கள். அதேபோல், உங்க தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் குழப்பமான சூழ்நிலைகள் எழும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தொந்தரவு செய்யலாம். மே - ஆகஸ்ட் வரை வேலையில் சவாலான கட்டத்தை அனுபவிக்க நேரிடும். வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். 

மாணவர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கிறது. கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எடுத்த எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். ஆனால், மே - செம்டம்பர் வரை மன அழுத்தம் அதிகரிக்கும். கடினமான உழைத்தால் வெற்றி அடைவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்  மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். 

பொருளாதாரம்

2023-ல் கும்ப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பீர்கள். ஜனவர மாதத்தில் செலவுகள் அதிகரித்துக் காணப்படும். அதேபோல், வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்கும். ஆனால், ஜனவரிக்கு பிறகு குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உடன்பிறந்தவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவும்.

விட்டுக்கொடுத்து போங்க

எந்த காரியமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நன்மையை தரும். கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அதிக வேலை காரணமாக உங்களுக்கு உடல் வலிகள் ஏற்படலாம். தேவையில்லாமல், மற்றவரை சந்தேகப்படுவதை தவிர்த்து விடுங்கள். 

பரிகாரம்:

கால பைரவரை வணங்குங்கள், உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். அதேபோல், குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்