Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்: குரு பார்வையால் ராஜ யோகம் தேடி வரப்போகிறது.. 

Nandhinipriya Ganeshan Updated:
மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்: குரு பார்வையால் ராஜ யோகம் தேடி வரப்போகிறது.. Representative Image.

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சனி பகவான் உங்க ராசிக்கு 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இருப்பினும், ஏழரை சனியில் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை கடத்த வேண்டியிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு இனி எல்லாமே ஜெயம்தான். அந்த அளவிற்கு சனி பகவான் உங்களுக்கு அற்புதமான நன்மைகளை அள்ளித்தரப் போகிறார். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். 

தொழில் வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். மேலும், குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

திருமண யோகம்

இதனால், கூட்டுத் தொழில் சிறப்படையும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஒற்றுமை அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைக்கூடி வரப்போகிறது. அதேபோல், மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானமான 4 ஆம் வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். 

மாணவர்களுக்கு

கல்லூரி மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கி, கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அரியர் வைத்த மகர ராசிக்காரர்கள் அனைவரும் இந்த வருடம் கிளியர் செய்துவிட்டு வேலைக்கு ரெடியாகி விடுவீர்கள். நிலம் அல்லது சொத்து விற்பனை மற்றும் வாங்குவதல் மூலம் லாபம் உண்டாகும். இன்னும் சிலருக்கு வைகாசி மாதத்திற்கு மேல் புது வீடு கட்டி குடியேறவும் யோகம் உண்டு. 

இதில் கவனம் தேவை

அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரப்போகிறது. அதே நேரத்தில் பண சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. அவரசப்பட்டு பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டும். அதேபோல், இருக்கின்ற வேலையை சிறப்புடன் செய்ய முயற்சி செய்யுங்கள். புதிய வேலைக்கு முயற்சிக்க இது நல்ல காலமும் இல்ல. இந்த விஷயங்களை தவிர வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது இந்த 2023. 

பரிகாரம்:

அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்