Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,168.44
545.35sensex(0.75%)
நிஃப்டி22,222.50
167.45sensex(0.76%)
USD
81.57
Exclusive

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்: ஆஹா.. இந்த வருஷம் உங்களுக்கு ஜாக்பாட் தான்.. ஆனா இதுல கவனமா இருக்கனும்..

Nandhinipriya Ganeshan Updated:
துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்: ஆஹா.. இந்த வருஷம் உங்களுக்கு ஜாக்பாட் தான்.. ஆனா இதுல கவனமா இருக்கனும்..Representative Image.

வரப்போகின்ற புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்களையும் நன்மைகளையும் அளிக்கப் போகிறது. அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 சில தனித்துவமான பலன்களை அளிக்கப் போகிறது என்றே சொல்லலாம். எல்லாவற்றிலும் சமநிலையை பராமரிக்கும் துலாம் ராசியினருக்கு 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாகவும், சாதகமானதாகவும் அமையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் இருந்து ஏழாவது வீட்டிற்கு நகர்கிறார். அதனால், வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குருவின் பரிபூரணமான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது.

திருமண யோகம்

குருவின் பார்வை உங்க ராசிக்கு  லாப ஸ்தானத்தின் மீது விழுவதால், உங்களுக்கு இருந்த திருமணத் தடை விலகி திருமண யோகம் கூடும். வைகாசி மாதத்தில் மண மேடை ஏறப்போகிறீர்கள். காதலில் அன்பும், அரவணைப்பும் கூடும்.  காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து கிரீன் சிக்னல்  கிடைக்கும். மேலும், அரசாங்க துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளமும் முன்பை விட அதிகமாக இருக்கும் மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படலாம்.

தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம்

சனி 5 ஆவது வீட்டிற்கு செல்வதால் சிரமங்கள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள், சச்சரவுகள் குறைந்து பாசமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆனால், மே - ஜூலை மாதங்களுக்கு இடையில் கணிசமான மாற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. துலாம் ராசியினருடைய தந்தைக்கு உடல்நிலை கணிசமாக மோசமடையக்கூடும். எனவே, கூடுதல் கவனம் தேவை. 

யோகம் அடிக்க போகுது

அர்த்தாஷ்டம சனி பகவான் உங்களை விட்டு நீங்கப்போகிறது. லாட்டரி மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எனவே, பணத்தை திட்டமிட்டு செலவிடுவது நல்லது. சிலருக்கு புது வீடு கட்டவும், அசையா சொத்து வாங்கவும் யோகம் உண்டு. ஜனவரி, ஜூன், டிசம்பர் மாதங்களில் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். இருப்பினும், ஏப்ரல் மாதங்களில் வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. 

வியாபாரம் எப்படி இருக்கும்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வியாபாரம் சற்று மந்தமாக தான் இருக்கும். எனவே, சில குறுக்குவழிகளை கையாண்டு வியாபாரத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இல்லையென்றால், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நஷ்டம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த நிலைமை சற்று மாறும். வெளிநாடு வாய்ப்புகளும் தேடி வரும். 

பொருளாதாரம்

அக்டோபர் மாத இறுதியில் ராகு 6 ஆவது வீட்டில் நுழையும்போது எதிர்ப்பாராத செலவுகள் அதிகரிக்கும். அதனால், பணத்தை கையாளுவதில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நிதி சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்களை பொறுத்து வரை இந்த ஆண்டு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். எனவே, கவனத்தோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 

பரிகாரம்: 

வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்.

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்