Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 17, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (18.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- நன்மை

ரிஷபம்- அச்சம்

மிதுனம்- நலம்

கடகம்- வெற்றி

சிம்மம்- முயற்சி

கன்னி- தனம்

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் சில குழப்பங்கள் வந்தாலும் அதை சரி செய்யும் மன உறுதி இருக்கும். தொழிலில் உதவி கிடைக்கும். பணியில் திட்டங்கள் நல்ல பலன் அளிக்கும். செல்வ நிலையில் செலவு தான் அதிகமாக இருக்கும். 

குடும்பத்தில் இன்று சந்தோஷம் அதிகமாகும். வீட்டில் பொறுப்புகள் கூடும். இல்லற வாழ்வில் சில மன வருத்தம் உண்டாகும், வெளிப்படையான பேச்சு வார்த்தை தேவை. ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் நடுக்கம் இருக்கும். வேலையில் மிகவும் கவனமாக இருப்பீர். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாளாகும், வியாபார ரீதியாக பல முடிவுகள் எடுப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். காதல் வாழ்வில் இனிமைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேலையில் திருப்தி இருக்காது. சிறிய நேரம் தனிமையில் நேரத்தை செலவிடுவீர். செலவுகள் அதிகமாக இருக்கும் ஆனால் செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், வீட்டில் கலகலப்பாக இருப்பீர். வாழ்க்கை துணையுடன் எரிச்சல் உண்டாகி மறையும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படும், ஓய்வு தேவைப்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று பல நாட்களாக செய்த காரியத்தின் பயன் நல்ல முன்னேற்றம் அளிக்கும். தேவையற்ற பணியை அறிந்து கொள்ளுவீர்.  தேவையற்ற செலவுகள் அதிகமாகும், நிதி நிலையில் நிதானம் தேவை. 

வீட்டில் பாசமாக நடந்து கொள்ளுவீர். கணவன் மனைவி உறவு நட்பாக செல்லும். உடல்நலத்தில் கவனம் தேவை, முக்கியமாக குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு செய்யும் செயலில் நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் செய்யும் வேலையைத் திரும்ப திரும்ப செய்ய வேண்டியதாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். பண வரவு கூடும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் நம்பிக்கை கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது, தியானம் போன்ற விஷயத்தில் ஆசை வரும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான நாளாக இருந்தும் செலவு தான் கவலை அளிக்கும்.... 18.10.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள் சுமுகமாக செல்லும், கடினமான பணியில் எளியதான வழியை அறிவீர். தொழிலில் பாராட்டு கிடைக்கும். நிதி நிலையில் சிறிய அளவு உயர்வு இருக்கும். 

வீட்டில் சில வாக்குவாதம் இருக்கும்.  சுற்றத்தார் உடன் பொறுமையாக செல்ல வேண்டும்.  கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  5

part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (18.10.2022, செவ்வாய்)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்