Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 25, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம்  9 ஆம் நாள் புதன்கிழமை (26.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- லாபம்

ரிஷபம்- நலம்

மிதுனம்- தனம்

கடகம்- ஆர்வம்

சிம்மம்-  வரவு

கன்னி- ஊக்கம்

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களுக்கு எதிர்பார்த்த பண வரவு இன்று கையில் இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருக்காது. பணியில் ஒரு திருப்பமாக முக்கிய பொறுப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அல்லது பரிசு கிடைக்கும். 

குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகமாகும். வீட்டில் உள்ளவர்களுடன் வெளியே செல்ல முடியும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று சந்தோஷம் அதிகமாக இருக்கும், சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைப்பர்.  தொழிலில்  உற்சாகமாக பணியாற்றுவீர். நிதி நிலை நன்றாக உள்ளது. 

வீட்டில் மகிழ்ச்சி அதிகமாகும், குடும்பத்தினர் உடன்  இன்பமாக பொழுதை செலவிடுவீர். காதல் வாழ்வில் தொடர்பு குறையும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9 

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

தொழிலில் இன்று சிறப்பாக செயல்பட்டு போதுமான செல்வத்தை சேர்த்துவிடுவீர். மாணவர்களுக்கு சக மாணவர்கள் உதவி சிறப்பாக படிக்க ஊக்கப்படுத்தும். அலுவலகத்தில் சக பணியாளர் உதவி கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் உண்டு. இல்லற வாழ்க்கை அமைதியாக செல்லும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், மூட்டு வலி அல்லது நரம்பு சார்ந்த தொல்லை இருக்கும்.  தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கமான வேலையை விரைவாக முடிப்பீர். புதிய விஷயத்தில் ஆர்வம் தோன்றும். மாணவர்களுக்கு புதிய ஞானம் கிடைக்கும்.  தேவைக்கு ஏற்ற பணப்புழக்கம் கையில் இருக்கும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும், மனதிற்கு விருப்பமானவர் உடன் அதிக நேரம் செலவிட முடியும். வீட்டில் சகஜமாக இருப்பீர். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்படலாம், சரியான உறக்கம் தேவைப்படும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்க்காத கணிசமான தன வரவு இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வு நேரத்திலும் உழைக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும். 

வீட்டில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். குடும்பத்தினரின் மனதைக் காயப்படுத்தக் கூடும். காதல் வாழ்வில் சந்தோஷம் குறையும். பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.  உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் உருவாகும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்றைக்கு எந்த கவலையும் இல்லை ஆனந்தம் தான்.... 26.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு புதிய மனிதர் சந்திப்பு கிடைக்கும். இலட்சியத்தை அடைய ஒரு உதவி கிடைக்கும். கல்வி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர் உடன் நட்பு உண்டாகும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு புரிதல் அளிக்கும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனை ஏற்படும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (26.10.2022, புதன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்