Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 7 ஆம் நாள் வியாழக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - கோபம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - எச்சரிக்கை

மகரம் - இன்பம்

கும்பம் - தனவரவு

மீனம் - குழப்பம்

நல்ல நேரம்:

காலை: 12.00 - 01.00 வரை

மாலை: -

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [22.12.2022]

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

வீண் கோபத்தினால் சில சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். எனவே, எதையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் ஆராய்ந்து செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சகபணியாளர்களுடன் கடுமையாக நடந்துக் கொள்வதை தவிர்க்கவும். இல்லையென்றால், வேலைக்கு உலை வைத்துவிடுவார்கள். சிலருக்கு வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். துணையுடன் வரட்டு கௌரவத்தை தவிர்ப்பதன் மூலம் நல்ல உறவுமுறையை பராமரிக்கலாம். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நிதி வளர்ச்சி சுமாராக தான் இருக்கும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும், பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. திடீர் செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த துறையில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் வீண் சிரமங்களை தவிர்க்கலாம். தேவையில்லாமல் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். திருமண வாழ்க்கையில் அனுசரித்து நடந்துக் கொள்ளுங்கள். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. யாரிடம் பேசும்போதும் கனிவாக பேசுங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

அதிர்ஷ்டத்தை நம்பாமல் சுய முயற்சியை நம்புங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க நல்ல நாள் அல்ல. செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், காலதாமதமும் ஏற்படும். குடும்ப பிரச்சனையில் அனுசரித்து போவது நல்லது. தனவரவும் செலவும் ஒரே மாதிரி இருக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விலையுயர்ந்த பொருள், பணம் திருட்டு போகவோ தொலைந்து போகவே வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்க. எச்சரிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

மிகவும் அனுகூலமான நாள். விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் பண சம்பந்தமான விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. காப்பீடு சார்ந்த தனவரவு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நெருங்கிய சொந்தபந்தங்கள் வழியாக மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும். சேமிப்பு உயரும். செலவுகள் அவ்வளவாக இருக்காது. ஆக மொத்தம் அனுகூலமான நாள். தனவரவு! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: துலாம் ராசியினருக்கு இதனால் தான் பிரச்சனையே வரும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan

மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். பணியிடத்தில் கடினமாக உழைத்தால் மட்டும் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். புதிய வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெரிய அளவில் பண முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்