Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [08 ஜனவரி 2023] நாளுக்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்:

மேஷம் - நலம்

ரிஷபம் - பெருமை

மிதுனம் - மறதி

கடகம் - அமைதி

சிம்மம் - கஷ்டம்

கன்னி - சாந்தம்

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

சலிப்பூட்டும் நாளாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் எந்த காரியத்திலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்த இழுபறிகள் விலகும். ஆரோக்கியம் சுமாராம இருக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பு உயரும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

முன்னேற்றமான பலன்களை அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி, அவர்களின் ஆதரவை பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். துணையுடன் பேசுவதால் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். சிறு தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Mithunam]

எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் அற்புதமான நாள். சுபகாரியம் சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து கடன் திரும்பி வரும். பணியிட சூழலில் பொறுமை மிகவும் அவசியம். வரவு செலவு இரண்டுமே காணப்படும் நாள். அனாவசிய செலவை குறைக்கவும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் அனுகூலப் பலனை தரும். வியாபாரம் தொடர்பான பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடச் சூழல் சாதகமானதாக இருக்கும். குடும்பத்தினரிடம் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திடீர் விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உருவாகலாம். உணவில் கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். மனதில் ஏற்படும் தேவையில்லாத குழப்பத்திற்காக துணையுடன் கோபப்படுவீர்கள். அதை தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கம் குறைந்து காணப்படும். வெளிஉலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். பணியிடச் சூழல் சாதமாக அமையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளை தேடுவீர்கள். சிலருக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணியிடத்தில் உயர் அதிகாரியிடம் சின்ன சின்ன கருத்து வேறுபாடு ஏற்படலாம். கோபத்தை தவிர்ப்பது உத்தமம். நினைத்த காரியம் நிறைவேறும். நெருக்கமானவர்களுடன் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [08.01.2023]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்